இப்படி அசிங்கப்படுவோம்னு கனவுலயும் கார்த்தி நினைச்சிருக்க மாட்டாரு

இப்படி அசிங்கப்படுவோம்னு கனவுலயும் கார்த்தி நினைச்சிருக்க மாட்டாரு

சிவகங்கை.,

நேற்றையதினம் சிவகங்கை நாடாளுமன்றத்திற்கான காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார். குறிப்பாக ராகுல் பாணியை பின்பற்ற வேண்டும் என்று கணித்து கார்த்தி களத்தில் இறங்கியிருக்கிறார்.

மாணவர்களின் கேள்விக்கு கார்த்தி பதிலளிக்கும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது சுமார் 200 – கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு கார்த்தியிடம் கேள்விகளை கேட்டனர்.

அப்போது மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கார்த்தி அளித்த பதில், மாணவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியதுடன், இவர் நாடாளுமன்ற உறுப்பினரானால் தொகுதி நிலைமை என்னவாகும் என்று வேதனைத்தெரிவிக்கும் விதமாக அமைந்தது.

மாணவர் ஒருவர் கார்த்தி சிதம்பரத்தை நோக்கி உங்களது தந்தை 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார் தொகுதிக்கு என்ன நலத்திட்டங்கள் கொண்டுவந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க:  ராகுல் தாத்தா நேருவின் ஆட்சியில் நடந்த LIC ஊழல் அப்பவே கிங் தெரியுமா?

அதற்கு கார்த்தி நலத்திட்டங்களை பட்டியல் இடுவதை விட்டு ஒரு விளக்கத்தை கொடுத்திருந்தார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நினைத்தால் தொகுதியை வளர்ச்சி அடைய வைக்கமுடியாது, மாநில அரசாங்கமும், உள்ளாட்சி அமைப்புகளும் சேர்ந்துதான் வளர்ச்சியடைய வைக்கமுடியும் என்ற புது தத்துவத்தை, சொல்லி விளக்கம் அளித்தார்.

சிதம்பரம் வெறும் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, உள்துறை அமைச்சராகவும், நிதி அமைச்சர் பதவியிலும் இருந்தவர் நாட்டிற்கே நிதியை ஒதுக்கும் நிதி அமைச்சர் பதவியில் இருந்தவரால் தொகுதியில் மாற்றத்தை கொண்டுவர முடியாதா என மாணவர்கள் முனங்கியது கார்த்தியின் காதுகளுக்கும் கேட்டிருக்கும்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினரால் தொகுதியை மாற்ற முடியாது என்றால் ஏன் இவர் போட்டியிட வேண்டும் என்று அவரது நேரலை நிகழ்வில் பதிவுகளையும் பதிந்திருந்தனர்.

இதையும் படிக்க:  அடுத்தடுத்து சிவகங்கையில் களம் இறங்கும் மோடி அமிட்ஷா உற்சாகத்தில் H ராஜா புரளிகளுக்கு முற்று புள்ளி.

தனது நிகழ்ச்சியினால் இப்படி ஒரு அவமானம் தன்னை வந்துசேரும், என்று கார்த்தி கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.

©TNNEWS24

Loading...