தமிழகத்தில் எத்தனை தொகுதிகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் கைப்பற்றும் தேர்தலுக்கு பின்பான நிலவரம்?

தமிழகத்தில் எத்தனை தொகுதிகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் கைப்பற்றும் தேர்தலுக்கு பின்பான நிலவரம்?

தமிழகம் முழுவதும் நேற்று அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது , திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 4 -தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் சமமாக பிரித்து வழங்கப்பட்டன.

கோவை , மதுரை ஆகிய தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் , திருப்பூர் , நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை தொகுதியில் பி. ஆர் நடராஜனும் , மதுரை தொகுதியில் எஸ். வெங்கடேசனும் களம் கண்டனர். மதுரை தொகுதியில் போட்டியிட்ட வெங்கடேசனை ஆதரித்து திரை பிரபலங்கள் சமுத்திரக்கனி மற்றும் பலர் பிரச்சாரம் செய்திருந்தனர்.

இதையும் படிக்க:  வாய்கிழிய பொய் சொல்றியே வெக்கமா இல்லை.. சோறுதானே சாப்புடுற கிழித்து தொங்க விட்ட தலித் பெண்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் தொகுதியில் கே. சுப்ராயனும் , நாகப்பட்டினம் தொகுதியில் எம்.செல்வராசும் களம் காண்கின்றனர்.

இதில் கோவை தொகுதியில் பாஜகவை எதிர்த்து மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது அந்த தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற வாய்ப்பில்லை என்ற சூழலே நிலவுகிறது.

அதே போல தான் மதுரை தொகுதியும் , திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதிமுகவிடம் தோல்வியடையும் என்ற சூழலே நிலவுகிறது.

நாகப்பட்டினம் தொகுதி மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சிக்கு சற்று ஆறுதலளிக்கும் தொகுதியாக உள்ளது அந்த தொகுதியிலும் கடும் போட்டி நிலவுவதால் வெற்றி உறுதி என்று சொல்லமுடியாது.

ஆனால் அதிமுகவிற்கும் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நாகப்பட்டினத்தில் கடும்போட்டி உருவாகியுள்ளது அதனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் நாகப்பட்டினம் தொகுதியை மட்டுமே மலை போல நம்பியுள்ளனர்.

இதையும் படிக்க:  பாகிஸ்தான் கைகூலியே கோசம் ! கல்லால் அடித்து விரட்டப்பட்ட மெஹபூபா முக்தி.. பரபரப்பான நிமிடம்

மொத்தத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்ட நான்கு தொகுதிகளில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு, நாகப்பட்டினத்தில் மட்டுமே இழுபறி நிலவுகிறது.

©TNNEWS24

Loading...