தீவிரவாதிகளுக்கு ஆதரவாக தேர்தல் அறிக்கை சுட்டிக்காட்டி வெளுத்து வாங்கிய அருண்ஜெட்லி.

தீவிரவாதிகளுக்கு ஆதரவாக தேர்தல் அறிக்கை சுட்டிக்காட்டி வெளுத்து வாங்கிய அருண்ஜெட்லி.

டெல்லி.,

காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தனது தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். அதில் நாட்டின் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இருப்பதாகவும் தேர்தல் அறிக்கையினை தயாரித்த குழுவினருக்கு ராகுல் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில கருத்துக்கள் நாட்டிற்கும். நாட்டுமக்களின் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிப்பதாக உள்ளதாக பாஜக குற்றம் சாட்டியது.

இதனையடுத்து இன்று பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி காங்கிரஸ் அரசின் தேர்தல் அறிக்கையையும் அதனை வெளியிட்ட ராகுல் காந்தியையும் வெளுத்து வாங்கியுள்ளார்.

இதையும் படிக்க:  மாட்டிக்கொண்ட கமல் பொது இடத்தில் செய்யுற வேலையா இது?

காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றதும், ஆயுதபாதுகாப்பு சட்டத்தினை திரும்ப பெறுவது மற்றும் குறைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றவாளிகள் ஜாமீன் பெரும் நடைமுறை எளிமையாக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இவ்விரண்டு கருத்துக்கள் குறித்து அருண்ஜெட்லி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஆயுத பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம் நாட்டில் மாவோயிஸ்ட் மற்றும் தீவிரவாதிகளின் மீதான நடவடிக்கை முடங்கும் அபாயம் உள்ளது, இப்படி தீவிரவாதிகளுக்கு ஆதரவாக தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் எப்படி வெளியிடலாம் என்றும்.,

ஒருவருக்கு ஜாமீன் வழங்குவது நீதிமன்றத்தின் கையில் உள்ளது ஆனால் அதன் அதிகாரத்தில் ராகுல் தலையிடுவது எந்த வகையில் நியாயம் மேலும் ஜாமீன் நடவடிக்கை பற்றி குற்றவாளிகள் சிந்திக்கவேண்டும், ஆனால் அதுகுறித்து ராகுல் ஏன் சிந்திக்கிறார் என வெளுத்து வாங்கியுள்ளார்.

இதையும் படிக்க:  கிறிஸ்துவர்களுக்கு ஆதரவாக பேசிய அருணனுக்கு தக்க பதிலடி கொடுத்த பொதுமக்கள்.

தற்போது இணையம் முழுவதும் காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

©TNNEWS24

Loading...