காங்கிரஸ் கட்சியாலும் ராகுல் காந்தியால் நெருங்க முடியாத இடத்தில் பாஜக மற்றும் மோடி !

பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் இடையே களத்தில் உள்ள போட்டியை தாண்டி சமூக வலைத்தளங்களிலும் கடும் போட்டி நிலவுகிறது.

நேற்று பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சத்தை தொட்டது.

இதற்காக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப ப பிரிவின் தலைவர் அமித் மால்வியா நன்றி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்து 14 ஆயிரம் பேராக மட்டுமே உள்ளது.

காங்கிரஸ் கட்சியை விட இரு மடங்கு அதிகமானோர் பாஜகவை ட்விட்டரில் பின்தொடர்கின்றனர், மேலும் உலகிலேயே அதிகமான மக்களால் பின்தொடரப்படும் அரசியல் தலைவர்கள் பட்டியலில் மோடி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இதையும் படிக்க:  மகன்களுக்கே பொறுப்பு கொடுத்தால் நாங்கள் எங்கு போவது கிராமசபை கூட்டத்தில் திமுக முன்னாள் எம்.பியை அடித்த திமுக தொண்டர்

அவரை 4 கோடியே 72 லட்சம் பேர் ட்விட்டரில் பின்தொடர்கின்றனர் முதல் இடத்தில் இருப்பவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா அவரை 10 கோடியே 60 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

இந்த வரிசையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை 90 லட்சத்து 4 ஆயிரம் பேர் மட்டுமே பின்தொடர்கின்றனர் மோடியை விட 5 மடங்கு குறைவான மக்களே ராகுலை பின்தொடர்கின்றனர்.

இதன் மூலம் சமூகவலைத்தளங்களில் காங்கிரஸ் மற்றும் ராகுலால் தொட முடியாத உயரத்தில் பாஜக உள்ளது என்று பாஜகவினர் மகிழ்ச்சி அடைகின்றனர்.

©TNNEWS24

மேலே இருக்கும் ஏதேனும் ஒரு விளம்பரத்தை தொடுவதன் மூலம் எங்களது முயற்சிக்கு நீங்களும் உதவலாம் ஒரு நொடி மட்டும் செலவு செய்து. நன்றி.

இதையும் படிக்க:  சாவிற்கு காரணம் இவர்கள்தான். வீடியோ வெளியிட்ட இஸ்லாமிய பெண் !

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...