அன்று ராமலிங்கம் இன்று கோவையில் சரத்குமார் என்ன நடக்கிறது தமிழகத்தில்?

அன்று ராமலிங்கம் இன்று கோவையில் சரத்குமார் என்ன நடக்கிறது தமிழகத்தில்?

ராமலிங்கம் படுகொலையை மறப்பதற்குள் இளைஞன் சரத்குமார் கோவையில் பதற்றம் !

கோவை.

மதமாற்றத்தை தடுத்த குற்றத்திற்காக மத வெறிபிடித்த சில நபர்களால் திருப்புவனம் பகுதியை சேர்ந்த, பாமக நிர்வாகி ராமலிங்கம் வெட்டி கொல்லப்பட்டார். இது தமிழகத்தை கடந்து இந்திய அளவில் எதிரொலித்தது.

குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சூழலில் தற்போது மீண்டும் ஒரு மத மோதல்களை தூண்டும் சம்பவம் கோவையில் நடைபெற்றிருப்பது, தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Photo credit – இந்து தமிழர் கட்சி முகநூல்

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார், இன்று இவர் தனது தோழியுடன் கோவை வ.உ.சி பூங்காவில் அமர்ந்திருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சேர்ந்து சரத்குமாருடன் எப்படி எங்கள் மதத்தை சேர்ந்த பெண்ணுடன் அமர்ந்திருக்கலாம் என்று கேள்வி எழுப்பி அவரை கலைந்துபோக சொல்லி மிரட்டி இருக்கிறார்கள்.

இதையும் படிக்க:  பெற்ற மகன்கள் மூவரும் மாவட்ட ஆட்சியர், வட்டாச்சியர், கூட்டுறவு தணிக்கை அலுவலர் ஆனால் எளிமையாக வாழும் தாய் தந்தையினர்

அவரும் அந்த பெண்ணும் அதை கண்டிக்கவே கூடி இருந்த இருவர் சரத்குமாரை நோக்கி கடுமையான ஆயுதங்கள் மற்றும் கற்களை கொண்டு தாக்கியதாகவும் இதனால் அவர் சுயநினைவு இழந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தற்போது அவரது பெற்றோர் உடனடியாக தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யவேண்டும் என்றும் இதுபோல் இந்து பெண்களுடன் பழகும் மற்ற சமுதாய ஆண்களை நாங்களும் கண்டிக்கலாமா அது சட்ட மீறல் இல்லையா என்றும் ஆவேசமடைந்தனர்.

இதுகுறித்து இந்து தமிழர்கட்சியை சேர்ந்த ரவிக்குமார் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மேலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரி வலியுறுத்தியுள்ளார்.

ராமலிங்கம் படுகொலையை தொடர்ந்து ராமநாதபுரத்தில் அன்வர் ராஜா மசூதிகள் விடாமல் விரட்டப்பட்டது, வாக்கு சேகரிக்க சென்ற செல்லூர் ராஜூவை தாக்க முயன்ற சம்பவத்தை தொடர்ந்து தோழியுடன் பேசிக்கொண்டிருந்த இளைஞனை தாக்கும் அளவிற்கு தமிழகத்தில் மத வெறி அதிகரித்து இருப்பதாகவும், இப்படியே சென்றால் தமிழகம் விரைவில் காஷ்மீரை போல மாற வாய்ப்பு இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க:  ஏய்யா எவ்ளோ சென்டிமெண்டா பேசுனாலும் வைகோவை காமெடியனாக தான் பார்ப்பீர்களா ..!

©TNNEWS24

Loading...