2014 -ல் கடைசியாக சென்னையை வென்றது RCB இன்று வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது

2014 -ல் கடைசியாக சென்னையை வென்றது RCB இன்று வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 12வது சீசன் இன்று சென்னையில் கோலாகலமாக துவங்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் இந்திய கேப்டன் கோலி தலைமையிலான RCB அணியும், தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் CSK அணியும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு மோதவுள்ளது.

2014-ம் ஆண்டு தான் கடைசியாக RCB சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி சேப்பாக்கத்தில் RCB 2008-ம் ஆண்டு தான் வென்றது. அதற்கு பின் வென்றதே இல்லை. இன்றைய போட்டியானது அதிரடி பேட்ஸ்மேன்களுக்கும் , சி.எஸ்.கேவின் சிக்கன பந்துவீச்சாளர்களுக்குமான போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  ராகுல் நேரு பரம்பரையை சார்ந்தவர் என்பதை தவிர வேறு எந்த தகுதியும் இல்லை சுஷ்மா சுவராஜ் பதிலடி!

தோனி தலைமையிலான சென்னை அணியை பொறுத்தமட்டில் பலவீனம் என்பது வேகப்பந்துவீச்சுதான் . பந்துவீச்சாளர் இங்கிடி காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.

டேவிட் வில்லேயும் தாமதமாக தான் அணியில் இணைய இருக்கிறார் . அதனால் சி.எஸ்.கேவின் வேகப்பந்துவீச்சு சரசுல் தாக்கூர் மற்றும் மோஹித் ஷர்மாவை ஆகிய இருவரை நம்பியே உள்ளது. வாட்சன் மற்றும் ப்ராவோ நடுவரிசையில் பந்து வீச்சிற்கு கைகொடுப்பார்கள். 

எனினும் பலமான ஸ்பின்னர்களை சி.எஸ்.கே அணி கொண்டுள்ளது. பலம் சேர்க்கும் விதமாக தாஹிர், சாண்ட்னர், கரண் ஷர்மா மற்றும் ஹர்பஜன் ஆகியோர் இருப்பார்கள். டூப்ளெசிஸ், தாஹிர், சாண்ட்னர் வெள்ளியன்று அணியில் சேர்வதால் அவர்கள் இன்றைய போட்டியில் இடம்பெறுவது சந்தேகம்

பேட்டிங்கை பொறுத்தமட்டில் கேதார் ஜாதவ் மற்றும் அம்பதி ராயுடு உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவதற்காக சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது . தோனி, ரெய்னாவை அதிகம் நம்பியே சி.எஸ்.கே அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இதையும் படிக்க:  இத்தனை பேர் வாழ்க்கையை போட்டு தள்ளிட்டு சமூக நீதி பேசுறாரா ஸ்டாலின்!

இன்றைய போட்டியை பொறுத்தமட்டில் குறைவாக ஸ்கோர் செய்யும் நாளாகவே அமையும். பெங்களூர் அணியை பொறுத்தமட்டில் ‘ஷால்லை’ பெரிதும் நம்பியுள்ளது. மொயின் அலி, பவன் நஹி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தனது பங்களிப்பை தருவார்கள்.
உமேஷ் யாதவ்,கோல்டர்நைல் , சிராஜ் பந்துவீச்சை பலப்படுத்துவார்கள்.

பெங்களூரு பேட்டிங்கை பொறுத்தமட்டில் ஹிட்மேயர், க்ளாசன், காரந்தோம் ஆகியோர் அதிரடி காட்டி கோலி, டிவில்லியர்ஸை பெரிதும் நம்புகிறது பெங்களூரு.

எனவே இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்றும் சொந்த மைதானத்தில் போட்டியிடுவதால் csk அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

©TNNEWS24

Loading...