கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் -கோவப்பட்ட அமைச்சர்.

கமல் வாயை கொடுத்து புண்ணாக்கி கொண்டார் என்று தான் சொல்லவேண்டும்.

சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்த கமல் அரவக்குறிச்சி தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து தான் என்று கூறினார், அது இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சுப்ரமணிய சாமி துவங்கி பாஜக தலைவர்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் , பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்தார்.

பொதுமக்கள் பலரும் கமலுக்கு எதிராக கருத்து கூறியுள்ளனர், இந்த நிலையில் தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

இதையும் படிக்க:  கமல்ஹாசனை வெளுத்து வாங்கிய பிரபல நடிகர் ! வெட்கமாக இல்லை கழுவி ஊத்திய H. ராஜா

இந்துக்களை பற்றி தவறாக பேசியதற்கு கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் , ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு இந்துக்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ஒருவர் எவ்வாறு இப்படி பேசலாம் என்ற கருத்தினை கமல் ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...