கர்நாடகாவில் உடைந்தது காங்கிரஸ் கூட்டணி தேவகவுடாவிற்கு எதிராக காங்கிரஸ் வேட்புமனு தாக்கல் !

கர்நாடகாவில்
உடைந்தது காங்கிரஸ் கூட்டணி தேவகவுடாவிற்கு எதிராக காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்

தும்கூர்.,

தும்கூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதாதல தலைவருமான தேவகவுடா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில்

கூட்டணியின் வேட்பாளராக கெளடாவின் பெயர் அறிவிக்கப்பட்ட போதிலும், காங்கிரஸ் தலைவர்கள் கே.என்.ராஜன்னா மற்றும் எஸ்.பி முதுஹானமுமாதா ஆகியோர் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இது கர்நாடக காங்கிரஸ் கூட்டணி இடையே பிளவை உண்டுபண்ணியுள்ளது, குறிப்பாக இருவரும் தேவகவுடா வேற தொகுதியில் இருந்து போட்டியிடவேண்டும், இது காங்கிரஸ் தொகுதி இங்கு கவுடா போட்டியிட்டால் தோல்வியை தழுவுவார் எனவே முடிவை மாற்ற வலியுறுத்தினர்.

இதையும் படிக்க:  கேள்வி கேட்டவரை மக்கள் முன்னிலையில் அடித்த ஜோதிமணி.. ஆதரவாளர்கள் வெறியாட்டம்..

மேலும் கவுடா தும்கூர்க்கு பதிலாக பெங்களூரு வடக்கிலிருந்து போட்டியிட நாங்கள் கவுடாவிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம். தேவே கவுடா இங்கு போட்டியிட விரும்பினால், காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட வேண்டும் இல்லை என்றால் வெற்றிபெற இயலாது என்று தெரிவித்தனர்.

இதனால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் கடும் பரபரப்பு நிலவி வருகிறது, காங்கிரஸ் வேண்டுமென்றே இதுபோன்று ஒரு விளையாட்டினை விளையாடுவதாகவும், இதன் பின்னணியில் சித்தராமையா அல்லது டெல்லியை சேர்ந்தவர்கள் தலையீடு இருக்கலாம் என்றும் இதே நிலை தொடர்ந்தால் கூட்டணியை விட்டு வெளியேற கூடிய சூழல் ஏற்படும் என்று மதசார்பற்ற ஜனதா தளம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பதவிக்கு ஆசைப்பட்ட காங்கிரஸ் குமாரசாமி இருவரும் வரும் தேர்தலில் காணாமல் போவார்கள் என்று பாஜகவினர் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க:  பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக 

©TNNEWS24

Loading...