தருமபுரி யாருக்கு வெளியானது தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட சர்வே முடிவுகள் !

தருமபுரி யாருக்கு வெளியானது தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட சர்வே முடிவுகள் !

தருமபுரி.,

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில், பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவதால், தருமபுரி மீண்டும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. இங்கு அ.தி.மு.க கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக டாக்டர் அன்புமணியும் தி.மு.க சார்பில் டாக்டர் செந்தில்குமாரும் அ.ம.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் மக்கள் நீதி மய்யம் சார்பாக வழக்கறிஞர் ராஜசேகரும் நாம் தமிழர் கட்சியின் ருக்குமணியும் களமிறங்கியுள்ளனர். 

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தமட்டில் தருமபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, அரூர், பெண்ணாகரம், மேட்டூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

இங்கு வன்னியர் சமுதாயத்தின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன, மேலும் தொகுதியில் 17 % கொங்கு வெள்ளாளர் சமூகத்தின் வாக்குகளும் உண்டு, எனவே அந்த வாக்குகளை குறிவைத்து கொங்கு வெள்ளாளர் சமூகத்தை சார்ந்த அமமுக வேட்பாளர் பழனியப்பன் களம் காண்கிறார்.

இதையும் படிக்க:  திருவாரூர் பக்கமே போக கூடாது பிரசன்னாவிற்கு வந்த சோதனை?

அன்புமணியை இந்த தேர்தலில் அடியோடு வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நோக்கத்துடன் திமுக தீவிர களப்பணியாற்றியது, பல இடங்களில் பணம் பாய்ந்துள்ளது. மறுபக்கம் பாமகவினர் எப்படியாவது இந்த தொகுதியில் மீண்டும் தங்கள் கொடியை பறக்கவிடவேண்டும் என்ற எண்ணத்துடன், இளைஞர்கள் முதல் அனைவரும் தீவிரமாக பணியாற்றினர்.

ஏறக்குறைய தருமபுரியின் களநிலவரம் இழுபறியாக இருக்கும் என்றே பல்வேறு கருத்து கணிப்புகளும் சொல்லிவந்தன, சாணக்யா சேனலில் பாண்டேயும் இதே கருத்தை தான் சொல்லியிருந்தார்.

ஆனால் தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் தலைகீழாக மாறியுள்ளது, தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பதிவாகியுள்ள தொகுதி தருமபுரிதான் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க:  பாமகவை வீழ்த்த எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவு செய்யத்தயார் என்ற பச்சமுத்து சீட் கொடுத்து அன்புமணியை வீழ்த்த திட்டம் .

தருமபுரியை பொறுத்தமட்டில் தினகரனின் கட்சியை சேர்ந்த பழனியப்பன் அதிக வாக்குகளை பிரிப்பார் அதன் மூலம் திமுக வெற்றிபெறலாம் என கணக்கிட்டு காய் நகர்த்தியது. ஆனால் பழனியப்பன் இந்தமுறை 7 முதல் 10 % வாக்குகளை மட்டுமே பெறுவார்.

இது அன்புமணிக்கான வெற்றிவாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. பாமக இங்கு 39 முதல் 41 % வாக்குகளை பெரும், திமுக 34 முதல் 37% வாக்குகளை பெரும் அமமுக 7-10 % வாக்குகளை மட்டுமே பெரும்.

Result

மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்த்த சூழலில் பாமக மற்றும் திமுக இடையே நேரடி போட்டி நிலவுவதால் அது அன்புமணிக்கு சாதகமாக அமைவதால் இந்தமுறை மீண்டும் இங்கு பாமகவே வெற்றிபெறும் என்பது முடிவாகிறது.

இதையும் படிக்க:  அய்யாக்கண்ணு வரிசையில் இணைந்த பனிமலர் திட்டிதீற்கும் திமுகவினர்.

©TNNEWS24

Loading...