பேருந்தில் இடம்பெற்ற கோபக்கார தோனி

கிரிக்கெட் வீரர் தோனியை கேப்டன் கூல் என்று அழைப்பது வழக்கம் அந்த பேருக்கு ஏற்றவாறு அவர் கடினமான சூழலிலும் மிகவும் கூலாக இருப்பார்.

ஆனால் கடந்த முறை சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியபோது கடைசி ஓவரில் ஒரு அம்பயர் நோ பால் கொடுக்க ஒரு அம்பையர் நோ பால் இல்லை என்று சொல்ல,

இறுதியில் அது நோ பால் இல்லை என்று கூறினர் , இதை கவனமாக வெளியிலிருந்து கவனித்த தோனி ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து மைதானத்திற்குள் வந்து அம்பையரிடம் ஆக்ரோஷமாக பேசினார்,

அந்த ஆட்டத்தில் சென்னை அணி இறுதி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றிபெற்றாலும் தோனியின் செயலே அனைவராலும் பரவலாக பேசப்பட்டது,

இதையும் படிக்க:  10 ஆண்டுகளுக்கு பிறகு மேன் ஆப் தி சீரிஸ் விருதை பெற்றார் தல தோனி

இந்த சம்பவத்தால் கவரப்பட்ட கரூரை சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவர் இந்த காட்சியை தத்ரூபமாக தனது பேருந்தில் வரைய நினைத்துள்ளார்,

அதன்படியே நல்ல தொழில் வல்லமை கொண்டவர்களை வைத்து இந்த படத்தை தனது பேருந்தில் வரைந்துள்ளார் இந்த பேருந்து கரூர் -நாமக்கல் வழியில் பயணிக்கிறது,

இந்த பேருந்து செல்லும்போது இதை அனைவரும் திரும்பிப்பார்க்கின்றனர் இதனால் பேருந்துக்கு வரும் பயணிகளின் என்ணிக்கையும் உயர்ந்துள்ளதாம்.

என்னத்த சொல்ல எல்லாம் தோனி வசம்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...