தூத்துக்குடியில் விரட்டி அடிக்கப்பட்ட கௌதமன் தமிழகம் முழுவதும் மக்கள் மனநிலை இதுதானா?

தூத்துக்குடியில் விரட்டி அடிக்கப்பட்ட கௌதமன் தமிழகம் முழுவதும் மக்கள் மனநிலை இதுதானா?

தூத்துக்குடி..,

திரைப்பட இயக்குனர் கௌதமன் ‘தமிழ் பேரரசு கட்சி’ என்ற புது கட்சியினை தொடங்கி தூத்துக்குடியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

தனக்கு அரசியல் ஆசையோ, கட்சி ஆரம்பிக்கும் எண்ணமோ இல்லை என்ற கௌதமன் திடீரென கட்சி ஆரம்பித்தது, அவரது உடன் இருக்கும் இளைஞர்களையே கொதிப்படைய செய்துள்ளது.

இந்த சூழலில் தமிழிசை போட்டியிடும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட இருப்பதாக கௌதமன் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்தார். அதனை தொடர்ந்து தான் ஸ்டெர்லைட் விவகாரத்தை முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்க இருப்பதாகவும் அறிவித்தார்.

இந்த சூழலில் நேற்று தனது விளாத்திகுளம் பகுதியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார், கௌதமன் அப்போது மத்திய மாநில அரசுகளை நாம் வீழ்த்த வேண்டும் என்றும் விரைவில் வீழ்த்தினால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடலாம் என்று வாக்கு சேகரத்திருக்கிறார்.

இதையும் படிக்க:  எங்க கண்ணீரை வச்சு காசு சம்பாரிக்குறீங்களே நீங்க நல்ல இருப்பிங்களா ! ஊடகங்களை காரி துப்பிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய்.

ஆனால் அங்கு தான் கௌதமனுக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது, அவர் வாக்கு சேகரித்த வீடு, ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் வேலை இழந்த ‘ராஜ ரெத்தினம்’ வீடு. இது தெரியாமல் அங்கு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட எனக்கு வாய்ப்புத்தாருங்கள் என்று கேட்டிருக்கிறார்.

ராஜரத்தினத்தின் மனைவி கௌதமனை ஒருமையில் பேசி திட்டியதுடன், உங்களை போன்றோர் பணம் சம்பாரிக்க எங்க வயித்தில் ஏன் அடிக்கிறீங்க, நீ எல்லாம் இப்போ தேர்தலில் நிற்பதே கனிமொழியிடம் காசு வாங்கத்தான் ஒழுங்கா சென்றுவிடு என்று வெளுத்து வாங்கிவிட்டார்.

நல்ல வேலை வீட்டில் அவரது கணவர் ராஜா ரத்தினம் இல்லையாம் இருந்திருந்தால் அவ்வளவுதான் என்கிறார்கள். இதுதான் ஒட்டுமொத்த தமிழகத்தின் மனநிலையாக இருக்குமோ என்று இப்போதே எதிர்க்கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டதாம்.

இதையும் படிக்க:  வீடியோ மாமியார் மருமகள் சண்டையை பார்க்க வசதிசெய்து தருவேன் கார்த்தி தேர்தல் வாக்குறுதி. சிரிப்பாய் சிரிக்கும் சிவகங்கை மக்கள்.

குறிப்பாக பல வருடங்களாக இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை வைத்து இப்போது போராட்டம் நடத்தியதே அரசியலுக்காகத்தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

©TNNEWS24

Loading...