32 ஆண்டுகளாக தன்னுடன் பயணித்த ரசிகருக்கு விஜயகாந்த் கொடுத்த தேர்தல் பரிசு. கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த ரசிகர்.

32 ஆண்டுகளாக தன்னுடன் பயணித்த ரசிகருக்கு விஜயகாந்த் கொடுத்த தேர்தல் பரிசு.

விருதுநகர்

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள
தேமுதிகவிற்கு நான்கு லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், விருதுநகர் தொகுதியில், தே.மு.தி.க., பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா போட்டியிடலாம் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் தனது ரசிகனுக்கு சீட் கொடுத்திருக்கிறார் ’32’ ஆண்டுகளாக, விஜயகாந்த்தின் மன்றம் மற்றும் கட்சியிலுள்ள அடிப்படை தொண்டரான, அழகர் என்ற அழகர்சாமிக்கு, ‘விருதுநகரில் சீட்’ கொடுக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்தை பூர்வீகமாக கொண்ட அழகர்சாமி, பள்ளி வயதான 15 வயது முதல், விஜயகாந்த் நற்பணி மன்ற துணை தலைவராக இருந்து வருகிறார். கடந்த, 1991-92ல், அரசு பஸ் கண்டக்டராக பணியில் இருந்த போது, அங்கும் விஜயகாந்த் மன்றத்தை துவக்கியுள்ளார் இதனால் பல்வேறு பாதிப்புகளுக்கும் உள்ளாகியிருக்கிறார் அழகர்சாமி.

இதையும் படிக்க:  துண்டு சீட்டை பார்க்காமல் ஸ்டாலின் தொடர்ந்து 5 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினால் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய தயார்.

விஜயகாந்த் கட்சி துவக்கிய 2005-யில் , மேடையில் அவருக்கு, செங்கோல் மற்றும் கிரீடம் அணிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் அழகர் . இதனால், அப்போதே அழகர்சாமியின் மனைவி சாமுண்டேஸ்வரியை, 2006 சட்டசபை தேர்தலில், திருமங்கலம் தொகுதியில் போட்டியிட விஜயகாந்த் உத்தரவிட்டார்.

அழகரும் தொடர்ந்து லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தல்களில், ‘தனக்கு சீட்’ கேட்டு வந்துள்ளார். அதன்படி, தற்போதைய லோக்சபா தேர்தலில் போட்டியிடவும், சீட் கேட்டிருந்தார்.

எனவே தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிக்கு அழகர் பெயரை விஜயகாந்தே தேர்வு செய்து கொடுத்திருக்கிறார்.

மேலும் இது பற்றி அழகர் கூறுகையில் உண்மையான ரசிகனுக்கு கேப்டன் கொடுத்த பரிசு என்றும் என்றும் எங்களது தலைவர் கேப்டன் வழியில் செயல்படுவோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதையும் படிக்க:  பதவிக்காக அடிக்கடி கொள்கைகளை மாற்றிக்கொண்டு கேவலமான அரசியல் செய்யும் திருமாவளவன்

©TNNEWS24

Loading...