பெண்காவலரை கைவைத்து மாணவங்கப்படுத்திய திமுக பிரமுகர் சிக்கினார் ! கனிமொழியிடம் கேள்வி

கள்ளக்குறிச்சி.,

ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் சசிகலா. இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத்தேர்தலின் போது, கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட, அ.செட்டிப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் சசிகலா ஈடுபட்டிருந்தார்.

அப்போது குடிபோதையில் வாக்குச்சாவடிக்கு வந்த இளைஞர்கள் இருவர் வாக்களிப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது, அவர்களை காவலர் சசிகலா வெளியேற்றவே.

திமுக கொடியுடன் வந்த நபர் பெண் காவலரை சட்டையை பிடித்து முன்னாள் கைவைத்து மாணவங்க படுத்தியிருக்கிறார். இதனையடுத்து காவலர் சசிகலா அந்த இளைஞனின் கையை கடித்ததுடன் , வலி தாங்காமல் அலறிய வாலிபர் அதன் பின்னரே சசிகலாவின் சட்டையிலிருந்து கையை எடுத்துள்ளான் .

இதையும் படிக்க:  கள்ளக்குறிச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி மாவட்ட கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது

உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான் இச்சம்பவம் தொடர்பாக ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் பெண் காவலர் சசிகலா புகார் அளித்தார். பின்னர் போலீஸார் தீவிரமாக நடத்திய விசாரணையில் சசிகலாவிடம் போதையில் ரகளை செய்த வாலிபனின் பெயர் விஜய் என்பதும், அவன் திமுக பிரமுகர் என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து விஜய் மீது 294 பி (ஆபாசமாக பேசுதல்), 353 (பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 506 (1) (கொலை மிரட்டல்) மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை அவனை போலீஸார் கைது செய்தனர்.

இதையும் படிக்க:  இதுதான் ஸ்டாலின் சந்திரசேகராவை சந்திக்காததன் காரணமா?

இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் திமுகவினர் மீது கடும் குற்றசாட்டை முன்வைத்தனர், ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இதுபோன்ற பெண்களை பட்டப்பகலில் அதுவும் தேர்தல் நேரத்திலேயே ரவுடிசியத்தில் ஈடுபட்டது பெண்கள் மத்தியில் பயத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கனிமொழி போன்றோர் பொள்ளாச்சி பெண் பாதிக்கப்பட்டதற்கு குரல் கொடுத்ததுபோல் ஏன் பணியில் உள்ள பெண்காவலர் மீது திமுகவினர் தவறாக நடந்துகொண்டதை கண்டிக்கவில்லை, எல்லாம் அரசியல்தானா என கேள்வி கேட்கின்றனர்.

©TNNEWS24

Loading...