ஆமா இவங்கதான் உதவி செஞ்சாங்க முடிஞ்சது ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை !

இலங்கை.,

தி.மு.க மற்றும் காங்கிரஸ் மீண்டும் கூட்டணி வைத்துள்ள நிலையில் ‘ஈழத்தை அழித்த பாவிகள்’ என்று எதிர்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த விமர்ச்சனங்களை உண்மையாக்குவதுபோல், ஜெகத்ரட்சகனின் பிஸ்னஸ் விபரங்கள் இருக்கின்றன.

தமிழகத்தில் மிக அதிகமாக சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது, நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம். இதில் தாங்கள் செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்பதை விட, எதிரணியினர் செய்த அட்டூழியங்களை சுட்டிக்காட்டி , அதில் அரசியல் ஆதாயம் தேட முயல்வதுதான் இப்போது டிரெண்டாகி உள்ளது . 

அந்த வகையில் தி.மு.க.வின் மிக பணக்கார வேட்பாளர்களில் ஒருவரான ஜெகத்ரட்சகனுக்கு எதிராக ஒரு ரகசியத்தை அம்பலப்படுத்தி , அவரது வெற்றிக்கு உலை வைக்கும் வகையில் பிரசாரத்தை கொண்டு சென்று கொண்டுள்ளது ஆளும் தரப்பு,

அது என்ன விவகாரம்?… என கேட்டபோது விளக்கிய அரசியல் அறிஞர்கள் ஸ்ரீலங்காவில் காமாந்தோட்ட ஹார்பருக்கு அருகே சுமார் 25000 கோடி ரூபாய் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட இருக்கிறதாம், இதில் கிட்டத்தட்ட பாதி பணத்தை, அதாவது பதிமூன்றாயிரம் கோடியை ‘silver park international pvt ltd’ எனும் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகின.

இதையும் படிக்க:  பாஜக அதிமுகவிற்கு எச்சரிக்கை விடுத்த வீரமணி ! அட கொடுமையே

இந்த சர்வதேச நிறுவனத்தின் இயக்குநர்களாக இருப்பவர்கள் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசுயா மற்றும் மகன் சந்தீப் மற்றும் மகள் ஸ்ரீநிஷா ஆகியோர்.

கடந்த 2017-ல் துவக்கப்பட்ட இந்த கம்பெனியில் சில மாதங்கள் இயக்குனராக இருந்த ஜெகத் ரட்சகன் , அதன் பின் விலகிவிட்டு, பொறுப்பை தன் சொந்த குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளார் என கம்பெனியின் ஆவணங்கள் துல்லியமாக நிரூபணம் செய்கின்றன.

இலங்கையில் இந்த முதலீடு விஷயமாக அவர்கள் அங்கே விமானத்தில் பயணம் செய்த ஆவணங்கள் முத்திலானவற்றை எடுத்துள்ளது ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஒரு ஸ்பை ஏஜென்ஸி நிறுவனம் .

தற்போது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது, அபிடவிட்டில் தனது சொத்து மதிப்பாக சுமார் 78- கோடி ரூபாய்க்குதான் காட்டியிருந்தாராம் ஜெகத்ரட்சகன் .

இதையும் படிக்க:  நள்ளிரவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை ஸ்டாலின் போன்ற கேவலமான நபரை...

ஆனால் இப்போது இப்படியொரு பல ஆயிரம் கோடி மெகா பணம் எங்கிருந்து அவருக்கு வந்தது? என்று கேள்வி கிளப்பியிருக்கும் ஆளுங்கட்சி, மேற்படி சர்வதேச கம்பெனி ஜெகத் உடையதுதான் என்பதையும் ஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்தில் நிரூபிக்கிறார்களாம்.

இலங்கையில் இறுதிப்போர் நடந்து லட்சக்கணக்கில்  தமிழர்கள் இறந்தபோது, ராஜபக்‌ஷே அரசுக்கு இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு ஆயுத உதவி செய்தது பலருக்கும் வெறுப்பை உண்டுபண்ணிய சூழலில் , அதை கூட்டணியில் இருந்தபடி மாநிலத்தை ஆண்ட தி.மு.க. தடுக்கவில்லை! என்ற விமர்சனம் இப்போது வரை தமிழினத்தை நேசிப்பவர்களால் முன்வைக்கப்படுகிறது .

இந்த நாடளுமன்ற தேர்தலில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் ‘தமிழ் ஈழத்தை அழித்த பாவிகள்’ என்று எதிர்கட்சியினர் வைக்கும் விமர்சனத்துக்கு வலு சேர்ப்பது போல் ஜெகத்ரட்சகனின் வியாபார விபரங்கள் இருக்கின்றன!” என்று சொல்லும் அரசியல் நிபுணர்கள்

இதையும் படிக்க:  வெளியானது டைம்ஸ் குழுமத்தின் பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகள்..! அதிர்ச்சியில் காங்கிரஸ்

தேர்தல் நேர்த்தில் இந்த விவகாரத்தை போட்டோ மற்றும் வீடியோ வடிவில் விளக்க இருப்பதாகவும் , இது வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு பெரும் நெருக்கடியை கொண்டு வரும் என்ற நம்பிக்கை அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே உள்ளது என சொல்லப்படுகிறது.

ஜெகத் ரட்சகன் இப்படி கையும் களவுமாக சிக்கியிருப்பதோடு, அவரால் கட்சியின் வெற்றிக்கும் பிரச்னை உருவாகியுள்ளதாக நினைக்கும் ஸ்டாலின், ‘வேட்புமனு தாக்கல் வேறு முடிந்துவிட்டது. இனி என்ன செய்ய?’ என்று புலம்புகிறாராம் இதனிடையே கனிமொழி தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவரங்களும் வெளியாகி இப்போது திமுகவிற்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ராஜபக்கசே வரை இந்த விவகாரம் சென்றுள்ளதாகவும் விரைவில் அவர் திமுக இலங்கை யுத்தத்தின் நாட்கள் மற்றும் தற்போதைய முதலீடுகள் வரை நடந்த உரையாடல்களை பதிவு செய்தால் திமுகவின் அரசியல் வாழ்க்கை பெரும் அளவில் ஆட்டம் காணும் என்றும் சொல்லப்படுகிறது.

©Tnnews24

Loading...