#video ஸ்டாலின் கண் எதிரே தாக்கப்பட்ட செய்தியாளர்கள் H ராஜா, SV சேகருக்கு எதிராக மட்டும்தான் ரோசம் வருமா வெளுத்துவாங்கிய பொதுமக்கள்

video ஸ்டாலின் கண் எதிரே தாக்கப்பட்ட செய்தியாளர்கள் H ராஜா, SV சேகருக்கு எதிராக மட்டும்தான் ரோசம் வருமா வெளுத்துவாங்கிய பொதுமக்கள்

திண்டுக்கல்.,

திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று திண்டுக்கல் சென்றிருந்தார்.

ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அங்கு திமுகவினர் சார்பில் அவருக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன, மேலும் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கும் விதமாக முதல் வரிசைக்கு முன்பு இடம் ஒதுக்கப்பட்டது.

இதனால் பின்வரிசையில் அமர்ந்த திமுகவினர் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறியதுடன், சிறிது நேரத்தில் தகாத வார்த்தைகளில் பேச தொடங்கினர். அப்போது அங்கு கூடி இருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் சேர்ந்து திமுகவினரை கண்டிக்கவே இடையில் அமர்ந்திருந்த இருவர் எழுந்து பத்திரிகையாளர்களின் கேமரா மற்றும் உபகரணங்களை
தூக்கி வீசினர்.

இதையும் படிக்க:  கேரள ஐயப்ப பக்தர் தீக்குளிப்பு உண்மையை வெளியிடாமல் மூடி மறைக்கும் தமிழக ஊடகங்கள்!

இவை அனைத்தும் திமுக தலைவர் ஸ்டாலின் கண் முன்னே நடைபெற்றது, ஆனால் அவர் அதனை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தது, திமுகவினரின் செயலை ஆதரிப்பது போல அமைந்தது என்று பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.

விடியோவை பார்க்க :-

அன்று sv சேகர் பேசியதற்கு எதிராக அவரது வீட்டின் மீது கல்லெறிந்த பத்திரிகையாளர்கள் மற்றும் H ராஜாவினை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள், இதனை ஊடகங்களில் விவாதித்திப்பார்களா, இல்லை.

பல ஊடக முதலாளிகள் திமுக கூட்டணியில் இருப்பதால் வேடிக்கை மட்டும் பார்ப்பார்களா என்றும் பொதுமக்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களை விளாசி வருகின்றனர்.

©TNNEWS24

Loading...