கண்டுபிடித்த துரைமுருகன் பரிதாப நிலையில் பிரசன்னா போட்ட நாடகம்

கண்டுபிடித்த துரைமுருகன் பரிதாப நிலையில் பிரசன்னா போட்ட நாடகம்

சென்னை.,

தமிழக தேர்தல் களம் தற்போது முன்னாள் துக்ளக் ஆசிரியர் சோ ஒரு பேட்டியில் சொன்னதுபோல் மாற்றத்தை அடைந்துள்ளது.

இந்துக்கள் வாக்கு வங்கி உருவாகிவிட்டால் திமுகவினர் அலகு குத்திக்கொண்டுகூட வாக்கு சேகரிக்க வருவார்கள் இது நிச்சயம் நடக்கும் என்று சொல்லியிருந்தார். தற்போது அதுமாதிரியான ஒரு மாற்றத்தை தமிழக தேர்தல் களம் சந்தித்து வருகிறது.

இந்து என்றால் திருடன் என்று சொன்ன கலைஞரின் மகன் ஸ்டாலின் தற்போது நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை. என் மனைவி தினமும் கோவிலுக்கு செல்பவர், எங்கள் வேட்பாளர்கள் ஆன்மீகவாதிகள் என்று கெஞ்சாத நிலைக்கு வந்திருக்கிறார்.

திராவிட இயக்கம்தான், முற்போக்குஇயக்கம் என்று சொல்லி மக்களை திசை திருப்பி வந்த பெரியாரிஸ்ட் போன்றவர்கள் தற்போது திமுகவினர் கூட மதிக்காத நிலையில் பிரச்சாரத்திற்கு அழைக்கப்படவில்லை வீரமணியின் பிரச்சாரங்கள் பல இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  2014 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக தொகுதி வாரியாக பெற்ற வாக்கு சதவிகித பட்டியல்

மேலும் திமுக சார்பில் விவாதங்களில் பங்கு பெரும் பிரசன்னா தொடர்ந்து பாஜகவை விமர்ச்சிப்பதாக எண்ணி , காவி தீவிரவாதிகள் என ஒட்டுமொத்த இந்துக்களையும் இழிவு படுத்தி பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

போதாதா குறைக்கு ஈரோடு மாநாட்டில் பிரதமர் என்றும் பாராமல் மோடியை ஒருமையில் விமர்சனம் செய்தது, ஆண்டாள் விவகாரத்தில் மிகவும் கீழ்த்தரமாக குடிகாரன் மதி மறந்து பேசுவதுபோல் ஆண்டாள் யாருக்கு பிறந்தால் என்று பேசியது முதல் பல காரணங்கள் பிரசன்னா மீது மக்களுக்கு வெறுப்பை தேடி தந்துள்ளது.

குறிப்பாக இது திமுகவை இந்து எதிர்ப்பு இயக்கமாக மக்கள் மத்தியில் நிலை நிறுத்தியது.

நிலைமை இப்படி இருக்கையில் தமிழகத்தில் நேரடியாக எந்த திமுக மற்றும் கூட்டணி வேட்பாளரை ஆதரித்தும் பிரச்சாரம் செய்ய பிரசன்னா வரக்கூடாது என்று அவர்களே வேண்டுகோள் வைத்திருக்கிறார்களாம். அவர் வந்து பேசினால் கிடைக்க கூடிய இந்துக்கள் வாக்குகளை கிடைக்காமல் செய்துவிடுவார் என்ற அச்சம் அவர்களுக்கு நிலவுகிறது.

இதையும் படிக்க:  #EXCLUSIVE அம்மாவை கொன்னது யாரு ஏன் மோடி வரக்கூடாது இராமநாதபுரத்தில் ஓட்டம் எடுத்த TTV தரப்பினர் வைரலாக பரவும் வீடியோ

இந்த சூழலில் துரைமுருகன் உதவியாளர் வீட்டில் பணம் சிக்கியது தொடர்பாக திமுகவினர் மீதே துரைமுருகனின் சந்தேகம் நீள்கிறதாம், இதற்கு பலவகையில், வேலூர் பகுதியை சேர்ந்த திமுகவினர் ஈடுபட்டிருக்கலாமா என்ற சந்தேகத்தில் இருந்தவருக்கு, தற்போது திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்ட பிரசன்னாவை துரைமுருகன் விரட்டி விட்ட பஞ்சாயத்தில் அவர்மீதும் சந்தேகம் இருக்கிறதாம்.

ஒருவேளை பிரசன்னா இந்த காரியத்தில் ஈடுபட்டிருக்கலாமோ, என்று அவர் சந்தேகிப்பதன் பலனாக பிரசன்னாவை தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுப்பதோடு நிறுத்திக்கொள், ஓட்டு கேட்டு எங்கும் செல்லவேண்டாம் என தலைமை மூலம் சொல்லிவிட்டாரம் துரைமுருகன்.

Dmk prasanna drama

இதனால் தனது வருமானம் பாதிக்கப்படுவதாக எண்ணிய பிரசன்னா தனது தந்தையை முன்னிறுத்தி நானும் இந்து என்று அரசியல் நாடகத்தை அரங்கேற்ற பாத்திருக்கிறார், அதுவும் எடுபடவில்லை, இப்போது தேவையில்லாமல் இந்துக்களை பகைத்துக்கொண்டோமோ என புலம்புகிறாராம் பிரசன்னா.

இதையும் படிக்க:  உலக அளவில் கேவலப்பட்ட திமுக ! பழிக்கு பழிவாங்கிய பாஜக !

என்னதான் புலம்பினாலும் ஆண்டாளை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் பேசியதை மறக்கமாட்டோம் என்று பலரும் எச்சரிக்கிறார்கள்.

©TNNEWS24

Loading...