பணம் குறித்து துரைமுருகனிடம் ஏன் நீங்கள் வாயை திறக்கவில்லை? இணையத்தில் வைரல் ஆகும் பேச்சு !

வேலூர்.,

நேற்று திமுக பொருளாளர் துரைமுருகன், உதவியாளர் மற்றும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டில் இருந்து மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்டது, குறிப்பாக வார்டு வாரியாக பெயர்கள் குறிப்பிடப்பட்டு புதிய ₹200 நோட்டுகள் வரிசையாக அடிக்கிவைக்கப்பட்டிருந்தன.

இந்த வீடியோ வெளியாகி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் துரைமுருகன். அப்போது அவர் விளக்கம் கொடுக்கும் சூழலில் பத்திரிகையாளர்கள் எந்த கேள்வியும் கேட்காமல் அமைதியாக இருந்தது பார்ப்போரை ஊடகங்களின் நடுநிலையை சந்தேகிக்க தோன்றியது.

குறிப்பாக அன்புமணி, மற்றும் பிரேமலதா ஆகியோரிடம் கூட்டணி தொடர்பாக நூறு கேள்விகளை கேட்ட பத்திரிகையாளர்கள், நேற்று துரைமுருகனிடம் உங்கள் உதவியாளருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்ற ஒற்றை கேள்வியை கூட கேட்கவில்லை.

இதையும் படிக்க:  உயிரிழந்த ராணுவ வீரருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு நிதிஉதவி அளித்த - செந்தில் - ராஜலக்ஷ்மி

இதனால் கொதிப்படைந்த பலரும் ஊடகங்களை விமர்ச்சித்து வரும் வேலையில் Sundar raju என்ற இளைஞர் ஒருவர் தனது மனதில் தோன்றிய கேள்விகளை பதிவு செய்தது தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகிறது.

அவர் சமூக ஊடகத்தில் பதிவு செய்த பதிவுகள் பின்வருமாறு :-

ரெய்டு நடத்தியதைப் பற்றி துரைமுருகன் பிரஸ் கிட்ட பேசும்போது அத்தனை நிருபர்களும் நவதுவாரங்களையும் மூடிக்கொண்டார்கள் போலிருக்கிறது. இதே வேற கட்சிக்காரனாக இருந்தால் என்ன எகத்தாளம் பேசி இருப்பாங்க. ஒரு நிருபர் கேட்கிறார், இத்தருணத்தில் உங்க தலைவர் இல்லையேங்கிற வருத்தம் இருக்கிறதா? ங்கிறார். ரொம்ப முக்கியமான கேள்வி பாருங்க…

இத்தனை பணம் யாருடையது னு கேட்டாங்களா? ஊர் வாரியாக, வார்டு வாரியாக பேக் செய்யப்பட்டிருக்கிறதே எதற்கு? கேட்கவில்லையே? கிங்ஸ்டன் காலேஜ் பைல்கள் கிடந்ததே. கேட்கவில்லையே. இதுல பாருங்க காலேஜ் பேரு கிங்ஸ்டன்? அடுத்தவனுக்குத்தான் தமிழ் உபதேசம்….

இதையும் படிக்க:  திருச்சியில் கல்லைக்கொண்டு அடித்து விரட்டப்பட்ட கி. வீரமணி அமைப்பினர் இந்து மக்கள் அமைப்பினர் பதிலடி வீடியோ பதற்றமான திருச்சி.

வெட்கம் கெட்டவர்கள்…

குறிப்பு: இப்போது ரெய்டு நடக்கிறதே, ஏற்கனவே நடந்த ரெய்டுகள் என்னவாயிற்று? எனக்கேட்கிறார்கள். வருமான வரித்துறையிடம் கேளுங்களேன். திமுக வினருக்கு ரெய்டு விட்டா உடனே அதிமுக விற்கு விட்ட ரெய்டு என்னாச்சுங்கிற கேள்வி எந்த வகையில் சேர்ந்தது. ஜெகத்ரட்சகன் வீட்டிலும்தான் ரெய்டு நடந்தது. அதற்குப்பிறகு என்னாச்சு? ஏன் அதையும் சேர்த்தே கேளுங்களேன்… இந்தியாவில் நீதித்துறை நடைமுறைகளினால் வழக்குகள் தீர்ப்பு வர எத்தனை காலம் எடுத்துக்கொள்கிறார்கள் தெரியுமல்லவா? அதையும் கேளுங்களேன்….

இவ்வாறு தனது முகநூலில் sundar raju பதிவு செய்துள்ளார்.

மேலும் பலர் இந்த நேரத்தில் பத்திரிகையாளர் பாண்டேவினை அதிகம் மிஸ்செய்வதாகவும், விரைவில் அவரது சாணக்யா டிஜிட்டல் சேனலில் துரைமுருகன் உதவியாளர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்த தனது பார்வையை வெளிப்படுத்துவார் என்றும் பேசிவருகின்றனர்.

இதையும் படிக்க:  பாண்டே வெளியிட்ட வீடியோ விரட்டி அடிக்கப்படும் பிரசன்னா வெளியில் தலைகாட்ட முடியாத நிலையில் திமுகவினர்.

©TNNEWS24

Loading...