மலையை காணோம் துரைமுருகன் வீட்டில் ரைடு வந்ததன் பின்னணி.

மலையை காணோம் துரைமுருகன் வீட்டில் ரைடு வந்ததன் பின்னணி.

வேலூர்.,

வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள துரைமுருகன் வீடு மட்டும் அவருக்கு சொந்தமான கல்லூரிகளில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு பல காரணங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருந்து வருகிறது.

1980 – 82 காலங்களில் எம் ஜி ஆர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது ‘TEL’ வெடிபொருள் தொழிற்சாலை இந்த தொழிற்சாலை அரசாங்க உத்தரவாதத்துடன் வெடிபொருட்கள் போன்றவற்றை தயாரித்து வருகிறது. மலையை குடைய பயன்படுத்தப்படும் வெடிகள் ஆகியவை இங்குதான் தயாரிக்கப்பட்டு தமிழகத்தின் இதர பகுதிகளின் பயன்பாட்டிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

வெடிபொருள் தொழிற்சாலை ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கவேண்டும் என்பதால் தமிழகம் -ஆந்திரா எல்லையில் இந்த தொழிற்சாலை அமைந்திருக்கும், வகையில் அப்போதைய முதல்வர் MGR திட்டம் வகுத்து அதனை செயல்படுத்தினார்.

இதையும் படிக்க:  எதிர்க்கட்சிகள் மூஞ்சியில் கரியை பூசிய தமிழர்கள் ! மோடியை வரவேற்று தேசிய அளவில் ட்விட்டரில் முதலிடத்தில் இடம்பெற்ற #maduraithanksmodi

அதன் சுற்று வட்டாரத்தில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு பள்ளி, கல்லூரி, திருமண மண்டபங்கள் இருக்க கூடாது அப்படி இருக்கையில் 2 -கிலோ மீட்டர் தூரத்திற்குள் எப்படி துரை முருகனுக்கு சொந்தமான பள்ளி, மற்றும் கல்லூரிகள் தற்போது இடம் பெற்றுள்ளன என்பது வேலூர் பகுதியில் உள்ளவர்கள் அனைவருக்கும் தெரியும்.

இப்போது TEL தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்கிவருவதும் வரலாறு, மேலும் கல்லூரிக்கு அருகே அமைத்துள்ள இடங்களை கையகப்படுத்துவதற்காக , இராணுவ வீரர் குடும்பத்தினருக்கு இன்று வரை எவ்வளவு தொல்லைகள் கொடுக்கப்பட்டுவருகின்றன என்பதை இன்று வரை அந்த கல்லூரியில் பணிபுரிபவர்கள் அனைவரும் அறிவர்.

மேலும் நிலைமை இப்படி சென்றுகொண்டிருக்க வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ரத்தினகிரி மலையை தற்போது காணவில்லை என்று பலரும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர், மலையை காணவில்லை என்று விசாரணை மேற்கொண்டதில் அந்த வழக்கு வருமானவரித்துறை வரை சென்று இப்போது துரைமுருகன் வீட்டில் வந்து நிற்கும் அளவிற்கு வந்துவிட்டதாம்.

இதையும் படிக்க:  நாங்க எப்படி சாதியை சொல்லி ஓட்டுக்கேட்பது மோடியின் திட்டத்தால் வெறுப்பான தமிழக கட்சிகள்

ஆனால் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வழக்கம்போல் வருமானவரித்துறை மீது கவனத்தை திசை திருப்பி தேர்தல் ஆதாயம் தேடலாம் என்றிருந்தவருக்கு அதுவே வினையாகி போயிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் வலம்வர தொடங்கிவிட்டன.

ஆமாம் அந்த மலை எங்க இதுதான் இப்போது வேலூர் மக்களின் கேள்வியாக உள்ளது.

©TNNEWS24

Loading...