ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெறபோவது யார் ?

ஈரோடு தொகுதி கொங்கு மண்டலத்தின் ஒரு முக்கியமான தொகுதி , கொங்கு பகுதி என்றாலே அது அதிமுகவின் கோட்டை என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இப்போது ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவின் மீது தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பெரும் அதிருப்தி நிலவினாலும்..,

கொங்கு பகுதி மக்களிடத்தில் அந்த அதிருப்தியை பெருமளவில் பார்க்க முடியவில்லை.. , நாம் பலரையும் ஈரோடு தொகுதியில் நேரில் சந்தித்து பேசியபோது நாம் உணர்ந்தது அது தான்

எடப்பாடி பழனிச்சாமியின் நிர்வாகத்தை பாராட்டும் மக்களை நாம் இங்கு பார்க்க முடிந்தது..,

மேலும் இந்த தொகுதியை திமுக தனது கூட்டணி கட்சியான மதிமுகவிற்கு ஒதுக்கியுள்ளது ஆனால் மறுமுனையில் அதிமுக நேரடியாக களம் காண்பதால் அதிமுகவிற்கு சாதகமா சூழல் உருவாகும்..

இதையும் படிக்க:  எடப்பாடி ஆட்சியை கவிழ்த்துவிட்டு திமுகவிற்கு வா மந்திரி பதவி.. தம்பிதுரை பின்னணியில் ஸ்டாலின்

மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி போட்டியிடவுள்ளார் , அவர் ஈரோடு தொகுதிக்கு புதிய வேட்பாளர் அல்ல..,

அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஈரோடு தொகுதியின் முதல் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த மதிமுகவின் வேட்பாளராக களம் கண்டு வெற்றியும் பெற்றார்..,

5 ஆண்டுகள் ஈரோடு தொகுதியின் MP யாக இருந்த அவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் மதிமுக சார்பில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார் இப்போது 3 ஆவது முறையாக அதே ஈரோடு தொகுதியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஈரோடு தொகுதி கடந்த 2009 பாராளுன்ற தேர்தலின் போது நடத்த தொகுதி மறுசீரமைப்பில் உருவானது..,

பழனி , கோபிசெட்டிபாளையம் , திருச்செங்கோடு என 3 பாராளுமன்ற தொகுதிக்குள் இருந்த 6 சட்டமன்ற தொகுதிகளை பிரித்தே ஈரோடு தொகுதி உருவானது..,

இதையும் படிக்க:  திருவாரூர் இடைதேர்தலில் ஜே தீபாவை போட்டியிட வைக்கலாம் என்றும் அதிமுக தலைமை முடிவு !

ஈரோடு தொகுதியில் காங்கேயம் , தாராபுரம் , ஈரோடு கிழக்கு , ஈரோடு மேற்கு , மொடக்குறிச்சி , குமாரபாளையம் என 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்குகின்றது.

அதிமுகவின் ஈரோடு தொகுதி வேட்பாளர் வெங்கு என்று பொதுமக்களால் அழைக்கப்படும் ஜி. மணிமாறன்

காங்கேயம் பகுதியை சார்ந்தவர் அதிமுகவின் காங்கேய நகர செயலாளர் , நாம் மக்களிடம் கேட்டதில் இந்த ஈரோடு தொகுதியில் அதிமுகவிற்கே வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ளது..

மேலும் இந்த தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் மதிமுக பூசணிக்காய் சின்னத்தில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதனால் இந்த தொகுதியை பொறுத்தவரை அதிமுகவின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

எனினும் களப்பணி தீவிரமாக ஈடுபட்டாலே முழு வெற்றி சாத்தியம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

©TNNEWS24

இதையும் படிக்க:  சிகப்பு சட்டை அணிந்து மேல்மருவத்தூர் சென்றால் முதல்வர் பதவி மே தினத்தில் தில்லாலங்கடி ஆடிய ஸ்டாலின் பரபர பின்னணி.
Loading...