பல்லடத்தில் கிறிஸ்தவ விழாவில் இந்துமத சடங்கை விமர்ச்சித்த திருமாவளவன் எச்சரித்த கொங்கு ஈஸ்வரன் கூட்டணி முறிவு?

பல்லடத்தில் கிறிஸ்தவ விழாவில் இந்துமத சடங்கை விமர்ச்சித்த திருமாவளவன் எச்சரித்த கொங்கு ஈஸ்வரன் கூட்டணி முறிவு?

நாமக்கல்.,

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தனது கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசிய பேச்சுக்கள் கோவை மாவட்ட அரசியல் சூழலின் எதிர்பார்ப்பாகத்தான் பார்க்கப்படுகிறது.

கொங்கு ஈஸ்வரன் அதிமுக. பாஜக கூட்டணிக்கு எதிராக திமுக கூட்டணியில் இணைந்ததை அவரது சமுதாயத்தை சேர்ந்தவர்களே விரும்பவில்லை குறிப்பாக நீண்ட நாளுக்கு பிறகு கொங்கு பகுதியை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருப்பதாகவும் அவரை எதிர்த்து அரசியல் செய்வதை பெரும்பாலான மக்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது.

இதையும் படிக்க:  வாரணாசிபோல் இராமநாதபுரம் முழுவதும் திறந்த வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி உற்சாகத்தில் பாஜக தொண்டர்கள் !

இந்த எதிர்ப்பு அலையை புரிந்துகொண்ட ஈஸ்வரன் தற்போது தான் போட்டியிடாமல் போட்டியில் இருந்து ஒதுங்கிக்கொண்டு தனது கட்சியை சேர்ந்த மற்றொரு வேட்பாளரை நிறுத்தியுள்ளார்.

இருப்பினும் மக்கள் மனதில் கோபம் தணிந்தபாடு இல்லை, இந்த சூழலில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நடைபெற்ற கிறிஸ்தவ கல்லூரி நிகழ்ச்சியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன், இந்து மதம் சடங்குகளில் ஒன்றான பெண்கள் பூப்படைதல் நிகழ்வு குறித்து சர்சைக்குரியவகையில் பேசியிருந்தார்.

இது பல்வேறு தரப்பினர் இடையே அதிர்ச்சியை உண்டாக்கிய சூழலில், ஈஸ்வரன் திருமாவளவனை விமர்ச்சித்து கடுமையான முறையில் தனது எதிர்ப்பினை பதிவு செய்தார், திருமாவளவனின் மதம் வெறியை தூண்டும் பேச்சுக்களை தடை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையும் படிக்க:  அனைத்து உணவகங்களிலும் தள்ளுபடி தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு !

இதனால் எப்போது வேண்டுமானாலும் ஈஸ்வரன் திமுக கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஈஸ்வரன் பேசிய வீடியோ :-

கொங்கு ஈஸ்வரன் பேட்டி
Loading...