மதரீதியாக பிளவுபட்டுள்ள கன்னியாகுமரியில் வெற்றி யாருக்கு வெளியான தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்து கணிப்பு?

கன்னியாகுமரி.,

தமிழக அரசியல் களத்தில் கன்னியாகுமரி, சிவகங்கை தொகுதிகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தமட்டில் யார் இங்கு யார் வெற்றி பெறுகிறார்களோ, அந்த கட்சிதான் மத்தியில் ஆட்சியமைக்கும் என்பது பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிற வரலாறு .

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

கன்னியாகுமரி,

நாகர்கோவில்,

குளச்சல்,

பத்மநாதபுரம்,

கிள்ளியூர்,

விளவங்கோடு.

தொகுதியிலுள்ள மொத்த வாக்குகள் 14.67 லட்சம் , கடந்த 2014 -தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள் 9.90 லட்சம் அதாவது 67% . 2019 – ம் ஆண்டு இந்தமுறை பதிவான வாக்குகள் எண்ணிக்கை 69.62 % ஆக உள்ளது.

கன்னியாகுமரி தொகுதியில் பா ஜ.க வின் சார்பில் சிட்டிங் எம் பி பொன் ராதா கிருஷ்ணனும்,காங்கிரஸ் சார்பில் வசந்த குமாரும்,நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் ஜெய்னரீனும், தினகரனின் அ ம மு க சார்பில் லக்ஷ்மணனும்,மக்கள் நீதி மய்யம் சார்பில் எபினேசரும் போட்டியிட்டார்கள்.

இதையும் படிக்க:  பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிந்தைய காலத்தில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாத 80,000பேர் மீது நடவடிக்கை!

கன்னியாகுமரியை பொறுத்தமட்டில் இந்த முறை சாதி, மதம் ஆகியவையே வெற்றி தோல்வியை தீர்மானிப்பதுபோல் அமைந்துள்ளதை நம்மால் நேரடியாக பார்க்கமுடிந்தது.

மேலும் சிலர் மதத்தினை தாண்டி பொன்ராதாகிருஷ்ணன் தொகுதிக்கு செய்த வளர்ச்சி பணிகளை கணக்கிட்டு வாக்களித்ததாகவும், சொல்லி இருக்கிறார்கள். இது பாஜகவிற்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

இந்தமுறை 2019 – மொத்தம் பதிவான வாக்குகளில் 53% இந்துக்கள் வாக்கும் ,40 சதவீதம் கிறிஸ்தவர்கள் வாக்குகளும் 6 சதவீதம் இதர மதத்தவர் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இங்கு பல மீனவ கிராமங்களில் பல கிறிஸ்த்தவர்களுக்கு வாக்கு இல்லை என்ற குற்றச்சாட்டும் முற்றுகை போராட்டமும் நடந்தது நினைவிருக்கலாம், அதனால் தான் 2014 – ம் ஆண்டினை காட்டிலும் இந்தமுறை கிறிஸ்த்தவர்கள் வாக்கு குறைவாக பதிவாக்கிருக்கிறது.

கிறிஸ்தவ நாடார்கள் ஒட்டு 80 சதவீதம் வசந்த குமார் பக்கம் செல்வதை பார்க்க முடிகிறது .ஆனால் மீதமுள்ள மற்ற சமுதாய கிறிஸ்துவர்கள் வாக்கு யாருக்கு பதிவானது என்று அறியமுடியவில்லை.

இதையும் படிக்க:  அதிரடியாக அரசியல் அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி .. உற்சாகத்தில் ரசிகர்கள்..

இங்கு தினகரனுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லாததால் பொன்ராதாகிருஷ்ணனுக்கு சென்றமுறை அதிமுகவிற்கு விழுந்த வாக்குகள் இப்போது 70 % வந்தடைந்திருக்கிறது.

கடந்த முறை பொன் ராதா கிருஷ்ணன் வாங்கிய வாக்குகளில் 90 சதவீதம் தான் தக்க வைக்க முடியும் என்கிறது கள நிலவரம் அவைகளில் பாதி நாம் தமிழர் கட்சிக்கும் ,மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் பிரிந்து செல்கிறது .

வாக்கு சதவீத அடிப்படையையும் ,கள நிலவரத்தையும் வைத்து பார்க்கும் போது பொன் ராதா கிருஷ்ணன் இந்த முறை 4. 28லட்சம் வாக்குகள் மொத்தம் பெறுவார் என்கிறது கணிப்பு.

சென்றமுறை வசந்த குமாருக்கு வாக்களித்த இந்து வாக்காளர்கள் பலரும் இந்தமுறை அவருக்கே வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

இருப்பினும் தி மு க , அ தி மு க,கம்யூன்ஸிட் களுக்கு விழுந்த கிறிஸ்தவ வாக்குகளில் நாம் தமிழர் மற்றும் ,அ ம மு க ,மக்கள் நீதி மய்யம் பிரித்து போக 80 சதவீதத்தை மொத்தமாக வாங்குகிறார் வசந்த குமார் .

இதையும் படிக்க:  நிறை மாத கர்ப்பிணி பெண்ணை தாக்கிய கம்யூனிஸ்ட்கள்?

அவைகளின் மொத்த கூட்டு சதவீதம் 1.63 லட்சங்கள்.இந்த வாக்கு விகித அடிப்படையிலும் மக்களின் கணிப்பு படியும் பார்க்கும் போதும் வசந்த குமார் தக்க வைத்திருக்கிற வாக்குகளையும் சேர்த்தால் மொத்தம் 3.97 லட்சம் .

நாகர்கோவில் தொகுதிகளில் மட்டும் தலா 1.1 லட்சம் வாக்குகளுக்கு மேல் வாங்குகிறார் பொன் ராதா கிருஷ்ணன்.

Result.

கிறிஸ்த்தவர்கள் வாக்கு அதிகம் பதிவாகாததும், இந்துக்கள் இந்தமுறை அதிகமாக வாக்களித்திருப்பதும் பொன் ராதா கிருஷ்ணனுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது, மேலும் இந்து நாடார்களை தாண்டி பிள்ளைமார் சமூகத்தினர் வாக்கு இந்த முறை தாமரைக்கு விழுந்துள்ளது.

இந்த காரணங்களால் கன்னியாகுமரியில் மீண்டும் தாமரை மலரும் என்பதே நமது கணிப்பாக உள்ளது.

©TNNEWS24

Loading...