முடிந்தது தேர்தல் இராமநாதபுரத்தில் வெல்வது யார்? பிரமாண்ட சர்வே முடிவு வெளியானது?

முடிந்தது தேர்தல் இராமநாதபுரத்தில் வெல்வது யார்? பிரமாண்ட சர்வே முடிவு வெளியானது.

இராமநாதபுரம்.,

தமிழகத்தில் உள்ள மற்ற தொகுதிகளை காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொண்ட தொகுதியாக இராமநாதபுரம் மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பாஜக மற்றும் முஸ்லீம் லீக் கட்சியினர் இங்கு நேரடியாக போட்டியிடுவதுதான்.

இங்கு பாஜக, முஸ்லீம் லீக், அமமுக கட்சியினர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது, முஸ்லீம் லீக் கட்சியை பொறுத்தமட்டில் முஸ்லீம் வாக்குகளை மனதில் வைத்தும், திமுகவின் நிரந்தர வாக்குகளை மனதில் மனதில் வைத்தும் தங்கள் பிரச்சாரத்தை முன்னெடுத்தன, குறிப்பாக யாதவர்கள் வாக்குகளை கவருவதற்காக கண்ணப்பனை கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.

அமமுக கட்சியை பொறுத்தமட்டில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்த் முன்னாள் அமைச்சர் நடராஜனின் மகன் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியை சேர்ந்தவர், தேவர் சமூகத்தை சேர்ந்தவர், மேலும் முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்தும், அதிமுகவில் திருவாடானை, R. S. மங்களம் பகுதிகளில் உள்ள கிராம வாக்குகளை குறிவைத்துதான் ஆனந்த் களம் கண்டிருந்தார் .

இதையும் படிக்க:  பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டார் பாண்டே தமிழகத்தில் இதுதான் முதல்முறை. முதல் கட்டத்தில் யார் முந்துவது.

பாஜகவை பொறுத்தமட்டில் தமிழகத்தில் கொங்கு மண்டலம், கன்னியாகுமரியை அடுத்து வலுவான அடித்தளத்தை கொண்ட பகுதி இராமநாதபுரம், இராமநாதபுரம் சிட்டியை பொறுத்தமட்டில் இப்போது நகராட்சி தேர்தல் நடந்தால் 60% வாக்குகளை பெற்று வெற்றிபெறக்கூடிய இடத்தில் பாஜக உள்ளது.

எனவே இராமநாதபுரம் டவுன், பரமக்குடி பகுதிகளை குறிவைத்து களம் இறங்கியுள்ளது பாஜக. இங்கு பாஜகவின் சார்பில் தேவர் சமூகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நைனார் நாகேந்திரன் களம் கண்டிருந்தார்.

இதனால் போட்டி மிகவும் கடுமையானதாக கருதப்பட்டது, அதன் படி களநிலவரங்கள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

இராமநாதபுரம் தொகுதியை பொறுத்தமட்டில் முஸ்லீம் லீக் ஏணி சின்னத்தில் போட்டியிடுவது அதற்கு பின்னடைவாக களத்தில் அமைந்திருக்கிறது, தீவிர இஸ்லாமியர் பகுதிகளை தாண்டி அதனை எடுத்து செல்ல முடியவில்லை, அதே நேரத்தில் பாஜகவிற்கும் கிராம பகுதிகளில் அதே நிலைமை தான், இதனால் தங்களது புது சின்னமான பரிசு பெட்டியை அமமுக அருமையாக கிராமம் வரை இரட்டை இலை, உதயசூரியன் இல்லாததால் எடுத்து சென்றுள்ளது.

இதையும் படிக்க:  ஒரே நாளில் உச்சம் தொட்ட சீமானின் அந்தரங்கம் லண்டன் வரை சென்ற பரிதாபம் போலீஸ் வலைவீச்சு தெறித்து ஓடிய தம்பிகள் !

எனவே எதிர்பார்ப்பை தாண்டி மும்முனை போட்டி மிக கடுமையானதாக இருக்கிறது, R. மங்களம், திருவாடானை பகுதிகளில், அமமுக-வும், ஏணியும் அதிக வாக்குகளை பெறுகின்றன. ஆனால் இராமநாதபுரம், பரமக்குடி மற்றும் கடற்கரை கிராமங்களில் இந்த முறை பாஜக 10 -யில் 6 வாக்குகளை பெற்றிருக்கிறது, மேலும் யாதவர், பிள்ளைமார், மற்றும் முக்குலத்தோர் சமூகத்தில் உள்ள அகமுடையார் பிரிவு வாக்குகள் அதிக அளவு பாஜகவிற்கு சென்றுள்ளது.

ஒட்டுமொத்த கணிப்புகளின் படி பதிவான வாக்குகளில் பாஜக 37 % வாக்குகளும் முஸ்லீம் லீக் 35% வாக்குகளையும், தினகரனின் அமமுக திருவாடானை, r. S. மங்களம் மற்றும் முதுகுளத்தூர் பகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றாலும் 18 % வாக்குகளை மற்றுமே பெறுகிறது. இதன் மூலம் போட்டி மிக மிக கடுமையாக இருந்தாலும் இந்த தொகுதியை பாஜக கைப்பற்றும் என்பதே முடிவு.

இதையும் படிக்க:  பாமக சார்பில் இவர்கள்தான் போட்டியிடுகிறார்கள் தனது சேனலில் பாண்டே வெளியிட்ட தகவல் !

(தினகரனின் 18 % வாக்குகள் அதிகமானால் அது பாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்தலாம். )

©TNNEWS24

Loading...