தமிழகமே எதிர்பார்க்கும் தேனி தொகுதியின் வெற்றி யாருக்கு வெளியானது பிரமாண்ட சர்வே முடிவு !

தமிழகமே எதிர்பார்க்கும் தேனி தொகுதியின் வெற்றி யாருக்கு வெளியானது பிரமாண்ட சர்வே முடிவு !

தேனி.,

தமிழகத்தின் நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக தேனி தொகுதி உள்ளது, அதற்கு காரணம் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளரின் மகன் ரவீந்திரநாத், மற்றும் அமமுக-வின் சார்பில் பன்னீர் செல்வதை கடுமையாக எதிர்த்துவரும் தங்க தமிழ்ச்செல்வனும் நேரடியாக போட்டியிடுவதே இந்த எதிர்பார்ப்பிற்கு காரணம்.

இங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் EVKS. இளங்கோவன் போட்டியிடுகிறார், தெலுங்கு மக்களின் வாக்குகளை குறிவைத்து அவர் களம் இறக்கப்பட்டிருக்கிறார்.

ஒரு காலத்தில் தென் தமிழகத்தில் மதுரைக்கு சரி நிகரான நகரமாக இருந்தது பெரியகுளம். இதனால் தான் பெரியகுளம் மக்களவை தொகுதியாக இருந்தது பின்பு தொகுதி மறுசீரமைப்பின் போது  இப்போது மாவட்ட தலைநகரான தேனியின் பெயரிலேயே மக்களவை தொகுதியாக மாற்றம் கண்டது.

தமிழகத்தில் நாடாளுமன்ற  தொகுதியின் பெயரில் கண்டிப்பாக சட்டப்பேரவைத் தொகுதி இருக்கும். இராமநாதபுரம்  நாடாளுமன்ற  தொகுதி என்றால் அதற்குள் விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது. ஆனால் தேனியின் பெயரில் நாடாளுமன்ற  தொகுதி மட்டுமே உள்ளது. தேனி சட்டப்பேரவைத் தொகுதி என்பது இல்லை.

தமிழகத்தில் விவசாயம் செழிப்பாக  நடைபெறும் மாவட்டங்களில் தேனி தொகுதியும் ஒன்று.  விவசாயத்தை நம்பியே பெருமளவு  இந்த பகுதியின் பொருளாதாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது . தமிழ் பேசும் மக்கள்  மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட மக்கள் கணிசமாக வசிக்கும் தொகுதி இது இதனால் தான் காங்கிரஸ் கட்சி சார்பில் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட evks இளங்கோவன் களம் இறக்கப்பட்டார்.

இதையும் படிக்க:  முகிலன் மற்றும் கல்லூரி மாணவர்களை வைத்து அடுத்த திட்டம் ரெடி ஸ்டெர்லைட் போராட்டத்தை போல பலிகொடுத்தாவது வெற்றி பெற திட்டம் !

தேனி மாவட்டத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளும், மதுரை மாவட்டத்தின் சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளும்  சேர்த்து மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் தேனி நாடாளுமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, தற்போது அ.ம.மு.க  பொதுச்செயலாளரான டி.டி.வி தினகரன் ஆகியோர் எம்.பி.யாக இருந்த தொகுதி இது எனவேதான் இதனை எப்படியாவது கைப்பற்றிய ஆகவேண்டும் என்று தினகரன் விரும்புகிறார்.

இந்த தொகுதிக்குப்பட்ட ஆண்டிபட்டியில்தான்  முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆரும். ஜெயலலிதாவும் போட்டியிட்டு வென்றிருக்கிறார்கள், ஆண்டிபட்டி மட்டுமின்றி போடி தொகுதியிலும் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றுள்ளனர் . எனவே அதிமுகவுக்கு வலுவான வாக்கு வங்கி  காலம் காலமாக இருந்து வந்துள்ளது.

தேனியி மக்களவை தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்.

கம்பம்

போடிநாயகனூர்

பெரியகுளம் (தனி )

ஆண்டிபட்டி

உசிலம்பட்டி

சோழவந்தான் (தனி )

தற்போதைய எம்.பி

பார்த்திபன், அதிமுக

இதையும் படிக்க:  பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக 

2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்

கட்சி                         வேட்பாளர்                                                வாக்குகள்

அதிமுக                 பார்த்திபன்                                               571254

திமுக                     பொன்.முத்துராமலிங்கம்                   256722

மதிமுக                 அழகுசுந்தரம்                                         134362

காங்கிரஸ்            ஆரோன் ரஷின்                                     71432

முந்தைய தேர்தல்களில் வென்றவர்கள்

பெரியகுளம் தொகுதி

1980       கம்பம் நடராஜன், திமுக

1982       ஜக்கையன், அதிமுக

1984       செல்வேந்திரன், அதிமுக

1989       சேடப்பட்டி முத்தையா, அதிமுக

1991       ராமசாமி, அதிமுக

1996       ஞானகுருசாமி, திமுக

1998       சேடப்பட்டி முத்தையா, அதிமுக

1999       டி.டி.வி தினகரன், அதிமுக

2004       ஜே.எம் ஆருண், காங்

தேனி தொகுதி

2009       ஜே.எம் ஆருண், காங்

சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? – 2016

கம்பம்                               : ஜக்கையன், அதிமுக

போடிநாயகனூர்             :  ஓ.பன்னீர்செல்வம், அதிமுக

பெரியகுளம் (தனி )      : கதிர்காமு, அதிமுக

ஆண்டிபட்டி                     : தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக

உசிலம்பட்டி                    : நீதிபதி, அதிமுக

சோழவந்தான் (தனி )    : மாணிக்கம், அதிமுக

இந்த தொகுதியின் 6 சட்டமன்ற தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது இதுவே இங்கு அதிமுக எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதனை நாம் அறிந்து கொள்ளலாம், மேலும் அப்போதைய அதிமுகவின் பொருளாளரும், ஜெயலலிதாவால் முதல்வர் பதவி கொடுத்து பணி செய்த பன்னீர் செல்வம் இந்த தொகுதியில் தனி செல்வாக்கு கொண்டிருக்கிறார்.

இதையும் படிக்க:  கமல்ஹாசனுடன் இணைந்த வீரமணி !


அதே நேரத்தில் முக்குலத்தோரில் பன்னீர் செல்வம் மகன் ரவீந்தர்  தேவர் சமூகத்தை சார்ந்தவர் என்பதும், தங்கத்தமிழ்செல்வன் கள்ளர் சமூகத்தை சார்ந்தவர், இவருக்கென்றும் தனியாக செல்வாக்கு உள்ளது, இங்கு கள்ளர் சமுதாய மக்கள் அதிகம் வசிப்பதால் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்று கணக்கிட்டு காய்களை நகர்த்தியது அமமுக.

தேர்தல் நேரத்தில் இரண்டு கட்சிகளுமே மாறி மாறி பணத்தினை தண்ணியாக செலவு செய்துள்ளனர். இங்கு நேரடியான போட்டி அதிமுக மற்றும் அமமுக இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே நிலவுகிறது.

கடைசி நேரத்தில் கொடுக்கப்பட்ட விட்டமின் ( ப) மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை ரவீந்திரநாதிற்கு வெற்றி வாய்ப்பை பெற்று தந்துள்ளன.


இங்கு வெற்றி வாய்ப்பு என்பது அதிமுகவின் இரட்டை இலைக்கே கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.  அதிமுக  39 % வாக்குகளை பெரும், அமமுக 34 %  வாக்குகளை பெற்று குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வி அடையும் என்பதே தேனி தொகுதியின் வாக்களிப்பிற்கு பிறகான தொகுதி நிலவரம்.

Result

தேனி தொகுதியை அதிமுக கைப்பற்றும்.


©TNNEWS24

Loading...