உலகக்கோப்பை கிரிக்கெட் அணிக்கு தேர்வானவர் வெளிப்படையாக தனது அரசியல் ஆதரவை தெரிவிப்பது இதுவே முதல் முறை.

என் ஆதரவு பாஜகவிற்கு மட்டுமே வெளிப்படையாக அறிவித்த ஜடேஜா

இந்திய அணியின் சிறந்த ஆல் ரௌண்டராகவும் சென்னை சூப்பர் கிங்ஸ், அணியின் முக்கிய வீரராகவும் விளங்குபவர் ரவீந்திர ஜடேஜா.

அவரது மனைவி சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில் , சமீபத்தில் அளித்த பேட்டியில்கூட இந்த தேசத்தின் மீது உண்மையான பற்றுகொண்டவர்கள் பாஜக என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ள ஜடேஜா நான் பாஜகவை ஆதரிக்கிறேன் என்று வெளிப்படையாக வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில் ஜெய் ஹிந்த் என்று பதிவிட்டுள்ளார் இந்த டீவீட்டை பதிவிட்ட 1 மணிநேரத்தில் 10 ,000 பேர் லைக் செய்துள்ளனர் 3100 பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.

இதையும் படிக்க:  எங்ககிட்டயும் அணுகுண்டு இருக்குனு பாகிஸ்தான் இனி மிரட்ட முடியாது எ சாட் செயற்கைகோள் வைத்த ஆப்பு மோடிக்கு கிடைத்த வெற்றி
Loading...