இதனால்தான் பாஜகவில் இணைந்தேன் !

ஏன் பாஜகவில் இணைந்தேன் காம்பிர் சொன்ன பதில்கள்.

டெல்லி.,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பிர் நேற்று பாஜக தலைவர் அமிட்ஷா மற்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

அதனை தொடர்ந்து டெல்லி நாடாளுமன்ற தொகுதியில், பாஜக சார்பில் காம்பிர் போட்டியிடுவார், என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. இன்று காலை டெல்லியில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது ஏன் பாஜகவில் இணைந்தீர்கள் என்ற கேள்விக்கு காம்பிர் அளித்த பதில்கள் இணையத்தில் தற்போது அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியா பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட நாடு என்பது உண்மைதான் ஆனால் நமது நாட்டினை போல் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கூட தேர்தலில் நிற்கமுடியாது.

இதையும் படிக்க:  வெளிநாடு ஒன்னு 700 கோடி தருது, வெள்ளமீட்பு நடவடிக்கையின் போது ராணுவம் பணம் கேட்டதா உண்மையை போட்டு உடைத்த மோடி வச்சு செய்யும் ஊடகங்கள்.

நமது தேசம் முன்னேற வேண்டும் எனில் இந்தியர் என்ற எண்ணம் உடையவர்கள் மட்டுமே நாட்டினை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லமுடியும் என்றும், இந்திய ரத்தம் ஓடுபவர்களுக்கு மட்டுமே இந்தியர்கள் தாக்கப்பட்டால் பதிலடி கொடுக்க தோணும் அது பாஜகவிடமும், மோடியிடமும் இருக்கிறது எனவே நான் பாஜகவில் இணைந்தேன் என்றார்.

மறைமுகமாக காங்கிரஸ் கட்சியை விம்சிக்கிறீர்களா என்ற கேள்விக்கு தான் யாரையும் விமர்சனம் செய்யவேண்டியதில்லை ஒட்டுமொத்த இந்தியரும் இந்தியரை மட்டுமே தேர்வு செய்வார்கள் என்று அதிரடியாக தெரிவித்தார்.

அவர் இந்தியர் என்று மோடியையும் வெளிநாட்டு நபர் என்று யாரை குறிப்பிட்டார் என்று உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம்.

©TNNEWS24

Loading...

இதையும் படிக்க:  சுப்ரமணிய சாமி மற்றும் ரஜினிகாந்தை இணைத்து வைரலாக பரப்பப்படும் செய்தி உண்மையானதா?