H ராஜா முயற்சிக்கு கிடைத்த வெற்றி கோவில் பணத்தை வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது நீதிமன்றம் உத்தரவு.

இந்து கோவில்கள் மீட்பு இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார் H ராஜா , அவர் அந்த இயக்கத்தின் மூலம் கோவில் நிலங்களை மீட்க போராடுவருகிறார்.

இந்த நிலையில் கோவில் நிலங்களை மீட்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நிதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ் கே கவுல் மற்றும் நீதிபதி சத்தியநாராயணா அடங்கிய அமர்வு நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவில் சிலைகளை திருடுவது வருத்தமளிக்கிறது

மன்னர்களும் , ஜமீன்தார்களும் கோவில்களுக்காக கொடுத்த நிலங்களை பலர் வருத்தமளிக்கிறது என்று கூறினர்.

மேலும் பல கோவில்களில் உண்டியல் உடைக்கப்படுகிறது,நகைகள் திருடப்படுகிறது , விலைமதிக்க முடியாத புராதன பொருட்கள் கடத்தப்படுகிறது இது தான் கோவில்களை பராமரிக்கும் லட்சணமா என்று அறநிலைய துறையை கண்டித்தனர்.

இதையும் படிக்க:  ராகுலுக்கு எந்த தகுதியும் இல்லை , முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா அதிரடி..

அதன் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் கோவில் நிலங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கவேண்டும் என்றும்

அதில் இந்த வழக்குகளை விரைவில் முடிக்கவேண்டும் என்றும் , கோவில் நிலங்களை மீட்கவும் , கடைகளுக்கு சரியான வாடகை நிர்ணயித்து அவற்றை சரியாக வசூல் செய்ய ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்

தமிழகத்தில் மட்டும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் 5 லட்சம் ஏக்கருக்கும் மேல் உள்ளது அவற்றை மீட்டு கோவில்களுக்கு ஒப்படைப்பதுடன்,

இனி கோவில்களில் வரும் வருமானத்தை கோவில்களுக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும் , வருவாய் குறைவாக உள்ள கோவில்களுக்கு வருவாய் அதிகமாக உள்ள கோவில்களின் வருமானத்தை எடுத்து அனைத்து கோவில்களையும் சரியாக பராமரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

இதையும் படிக்க:  அரசு ஆசிரியர் இப்படியா மாணவர்களிடம் சாதி வெறியை காட்டுவது கொந்தளித்த வன்னியர் சமூகத்தினர் ! வீடியோ

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு H ராஜாவின் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கபடுகிறது.

©TNNEWS24

Loading...