தமிழக வரலாற்றில் முதன்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்த இந்து ஆன்மீகவாதிகள் திசை திரும்பிய பிரச்சாரம்

தமிழக அரசியல் களத்தில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது என்பதை திமுக தலைவர்கள் நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்று சொல்லியதில் இருந்தே தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

வடமாநிலங்கில் தேர்தல் சமயத்தில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று இந்து மத ஆன்மீகவாதிகளும் , மத குருமார்களும் கூறுவது வழக்கம்.

ஆனால் தமிழக அரசியல் வரலாற்றில் அப்படி நடந்ததில்லை , தமிழகத்தை பொறுத்தவரை சர்ச் மற்றும் மசூதிகள் மட்டுமே அவ்வாறு தங்கள் மதத்தினரிடம் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் தான் நேற்று இந்து மத ஆனிமீக வாதிகள் 13-பேர் செய்தியாளர்களை சந்தித்தனர் இது தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறை,

அவர்கள் அந்த பேட்டியில் இவர்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும். என்று யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை மாறாக இந்து மதத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் , இந்து கடவுள்களை இழிவுபடுத்துபவர்களுக்கு இந்துக்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

குறிப்பாக தொடர்ந்து இந்து கலாச்சாரம், திருமணம், வழிபாட்டுமுறை அனைத்தையும் கேலியும் கிண்டலும் செய்துவிட்டு தற்போது தேர்தல் நேரத்தில் இந்துக்களுக்கு ஆதரவானவர்கள் போல பேசுகின்றனர்.

இதையும் படிக்க:  ராகுல்காந்தி நேரு  பரம்பரையை  சார்ந்தவர் என்பதை தவிர வேறு எந்த தகுதியும் இல்லை சுஷ்மா சுவராஜ் பதிலடி!

இப்போது மட்டுமல்ல கடந்தகாலங்களில் இதே போல பேசுவார்கள் தேர்தல் நேரத்தில் அமைதியாகிவிட்டு பிறகு மீண்டும் மதத்தினை பலிப்பார்கள், இனிமேல் யார் இந்துமதத்தினை தவறாக விமர்சனம் செய்கிறார்களோ அவர்களை ஆதரிக்கவேண்டாம் என்று பத்திரிகையாளர்கள் முன்பு தெரிவித்தனர்.

கிறிஸ்தவ பத்திரியாளர்கள், முஸ்லீம் இமாம் போன்றவர்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசிருக்கும் நேரத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்களும் இப்போது இணைந்திருப்பது பல அரசியல் கட்சிகள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

கர்நாடகத்தில் முன்பு இதுபோல் இந்து அர்ச்சகர்கள் ஒன்று கூடி பேட்டிகொடுத்தனர் அதன் பிறகு அங்கு அரசியலில் மிக பெரிய மாற்றம் நடைபெற்றது அதன் பிறகு எந்த அரசியல் கட்சியினரும் அங்கு இந்து மதத்தினை விமர்ச்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:  வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஸ்டாலின் உண்மையை போட்டு உடைத்த தமிழிசை !

©TNNEWS24

Loading...