வெற்றிவாய்ப்பு குறித்து தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக மனம் திறந்த H. ராஜா !

வெற்றிவாய்ப்பு குறித்து தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக மனம் திறந்த H. ராஜா !

பாஜக தேசிய செயலாளர் H ராஜா இன்று பாஜகவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்ற தனது கருத்தினை முதல் முறையாக சமூகவலைத்தளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

H ராஜா தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு :-

தேர்தல்கள் முடிந்து விட்டன. பல கருத்துக் கணிப்புகள், கணிப்பு என்கின்ற பெயரில் திணிப்பு முயற்சிகள் பல நடந்துள்ளன. முடிவுகள் வரும்வரை காத்திருப்போம்.
ஆனால் செல்வி.ஜெயலலிதா அவர்களும் திரு. கருணாநிதி அவர்களும் இல்லாத முதல் தேர்தல் இது. இத்தேர்தல் பல முந்தைய வாக்கு வங்கி கணக்குகளைத் தகர்த்திருக்கும்.
Motivated media கணக்குகள் பொய்யாக மாறும். மோடி எதிர்ப்பு ( வெறுப்பு) பிரச்சாரம் எடுபடாமல் போயிருக்கும் என்பதே என் கணிப்பு.
இத்தேர்தலின்போது நான் 22 நாட்கள் நாளொன்றிற்கு 30 முதல் 50 கூட்டங்கள் பேசியுள்ளேன். குறைந்தபட்சம் 780 கூட்டங்களில் மக்களை சந்தித்துள்ளேன். குறைந்தபட்சம் 4.5 லட்சம் வாக்காளர்களை நேரில் சந்தித்துள்ளேன். இதில் நான் பார்த்த, உணர்ந்தவைகள்.

இதையும் படிக்க:  தந்தை பெயர் சர்ச்சையால் நிறுத்தி வைக்கப்பட்டதா கனிமொழி வேட்புமனு நடந்தது என்ன?
  1. வங்கிக் கணக்குகள், கழிவறை திட்டங்கள், சமையல் எரிவாயு திட்டம், பிரதமர் வீட்டுவசதித்திட்டம், விபத்துக் காப்பீடு திட்டம், சிறு குறு விவசாயிகள் நிதி உதவி திட்டம் ஆகியவை மோடி சர்கார் திட்டங்கள் என மக்கள் உணர்ந்துள்ளனர்.
  2. கீழ் மட்டத்தில் அஇஅதிமுக கட்டுக்கோப்புடன் உள்ளது.
  3. திமுக தலைவர் ஸ்டாலினின் இந்து விரோத பேச்சுக்கள் மற்றும் திக வீரமணியின் கிருஷ்ணபகவான் குறித்த அருவருப்பான பேச்சு இந்துக்களிடையே குறிப்பாக கிராமங்களில் முகச்சுளிப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
  4. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்ட்ரைக் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
  1. மோடிஜி யின் ஊழலற்ற திறமையான மத்திய அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்கிற உணர்வை மக்கள் முகத்தில் அறிய முடிந்தது.
    எனவே புதிய வாக்கு வங்கிக் கணக்கு இத்தேர்தல் மூலம் உருவாக்கப்படும் என்றே தோன்றுகிறது.
இதையும் படிக்க:  மேடையில் வைத்து திருமாவளவனை அவமான படுத்திய சோனியா காந்தியுடன்தான் மீண்டும் கூட்டணியா?

இவ்வாறு ராஜா தனது கருத்துக்களை முதல் முறையாக தேர்தலுக்கு பின்பு மனம் திறந்துள்ளார்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...