சரக்கு மிடுக்கு என்று திருமாவளவன் பேசியபோது முதல் ஆளாக கண்டித்த நபர் சிவகங்கையில் அனைத்து சாதியினர் இடையே பெருகும் ஆதரவு வெற்றியை நோக்கி H. ராஜா !

சரக்கு மிடுக்கு என்று திருமாவளவன் பேசியபோது முதல் ஆளாக கண்டித்த நபர் சிவகங்கையில் அனைத்து சாதியினர் இடையே பெருகும் ஆதரவு வெற்றியை நோக்கி H. ராஜா

காரைக்குடி

சிவகங்கை தொகுதியில் பாஜக தேசிய செயலாளர் H. ராஜா பாஜக அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார்.

அதனை முன்னிட்டு சிவகங்கையின் தற்போதைய MP மற்றும் சிவகங்கை மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதனை சந்தித்து கலந்துரையாடினார்.

தற்போது அதிமுக கூட்டணியில் போட்டியிடும் H ராஜா, காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் அமமுக சார்பில் போட்டியிடும் தேர்போகி பாண்டி இடையே கடும் போட்டி நிலவும் என்றே கணக்கிடப்படுகிறது, குறிப்பாக எப்போதும் காங்கிரஸ் சிதம்பரத்திற்கு ஆதரவாக இருந்த வல்லம்பர் சமுதாய ஓட்டுகள் இந்த முறை பாஜகவிற்கு விலும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் இந்தியா , பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப உத்தரவு.

அதற்கு காரணமாக பார்க்கப்படுவது திருமாவளவன் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றதுதான், ஏனெனில் தனது கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன் தங்களுக்கு சரக்கு, மிடுக்கு இருக்கிறது எனவே மற்ற சமுதாய பெண்கள் எங்களை தேடி வருகிறார்கள் என்று கொச்சையாக பேசினார்.

இதனை பல சமுதாயத்தினர் எதிர்த்த போதும் முதல் ஆளாக செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், எச்சரிக்கையும் செய்தார் H ராஜா. இதனால் அப்போது பலரும் H ராஜாவினை பாராட்டினர்.

இந்த சூழலில் தான் காரைக்குடியில் H ராஜாவினை சந்தித்து 16 சமுதாய சங்கங்களை சேர்ந்தவர்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். அத்துடன் h ராஜாவின் வெற்றிக்கு வாக்கு சேகரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் சிவகங்கையில் ராஜாவிற்கு ஆதரவு அலை அதிகரித்திருப்பதாகவே செய்திகள் வருகின்றன. சட்டமன்ற உறுப்பினராக சட்டசபைக்கு சென்ற ராஜா இந்த முறை நாடாளுமன்றத்திற்கு செல்வாரா என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க:  இப்படி அசிங்கப்படுவோம்னு கனவுலயும் கார்த்தி நினைச்சிருக்க மாட்டாரு

©TNNEWS24

Loading...