ஒரே பேட்டி பனிமலரை வெளுத்து வாங்கிய H.ராஜா

ஒரே பேட்டி பணிமலரை வெளுத்து வாங்கிய H.ராஜா

காரைக்குடி.

பாஜக சார்பில் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் H ராஜா, பெரியார் கொள்கையை கொண்ட பணிமலரின் தனியார் YOUTUBE சேனலுக்கு பேட்டி ஒன்றினை அளித்திருந்தார்.

அதில் பனிமலர் கேட்ட பல கேள்விகளுக்கு ராஜா அளித்த பதில்கள் சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட பதிலடியாக அமைந்தது.

நீங்கள் தீவிர இந்துத்துவா, இந்து ஆதரவாளர் அப்படி இருக்கையில் உங்களது கொள்கை சிறுபாண்மை மக்களுக்கான பதற்றத்தை அதிகரிப்பதாக இருக்காதா என பனிமலர் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு ராஜா வேண்டுமென்றே இந்த கேள்வியை நீங்கள் கேட்பதாக தோன்றுகிறது, பகவான் கிருஷ்ணரை திராவிட கழகத்தை சேர்ந்த வீரமணி மிகவும் கேவலமாக கீழ்த்தரமான வார்த்தைகளை பயன் படுத்தி விமர்ச்சிக்கும் போது கேள்வி கேட்காமல் என்ன செய்வது அமைதியா இருக்க சொல்கிறீர்களா என்று பதில் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க:  முதல்வரின் சேலம் தொகுதி கைகூடுகிறதா? கைநழுவுகிறதா? வெளியானது பிரமாண்ட சர்வே முடிவு !

மேலும் பனிமலர் ராஜாவிடம் உங்களை விமர்ச்சிப்பவர்களை ஆன்டி இந்தியன் என்கிறீர்களே அப்படி விமர்ச்சிப்பது மிகவும் தவறான செயல் இல்லையா என்று கேட்க

ராஜா அளித்த பதில் எப்போதும் செய்தியாளர்கள் மீண்டும் இந்த கேள்வியை கேட்கமாட்டார்கள் என்கின்ற அளவிற்கு இருந்தது.

நான் பாஜகவையோ, இல்லை என்னை விமர்ச்சிப்பவர்களை என்றும் ஆண்டி இந்தியன் என்று சொன்னதில்லை மாறாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் புகுந்து இனி தனி தமிழ்நாடு, இந்தியா என்ற ஒரு நாடு இல்லை என்று பேசுபவர்களை அப்படிதான் சொல்லுவேன் என்று அழுத்தம் திருத்தமாக அடித்து சொல்லிவிட்டார்.

மேலும் இந்த நாட்டின் ஒற்றுமையை விரும்புபவன் நான் என்றும் என்னை ஸ்டாலின் விமர்சனம் செய்வதையோ இல்லை மற்றவர்கள் விமர்சனம் செய்வதை பற்றி கவலை படக்கூடியவன் நான் இல்லை, எனது நாடு, கடவுள், தலைவரை விமர்சனம் செய்பவர்கள் என்றும் கேள்வி கேட்பேன்.

இதையும் படிக்க:  விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை இழிவுபடுத்தும் திமுகவினர் கடும் அதிருப்தியில் தொண்டர்கள்.

உங்களை போன்ற ஊடகத்தினர் நமது ராணுவ வீரர்கள் நம்மை தாக்கிய தீவிரவாதிகளை அவர்கள் இடத்திற்கு சென்று அழித்ததற்கு ஆதாரம் கேட்கிறீர்கள்? இப்படித்தான் அமெரிக்கா பாகிஸ்தானிற்குள் புகுந்து பின் லேடனை கொன்றபோது கேள்வி எழுப்பினார்களா என்று வெளுத்து வாங்கிவிட்டார்.

மொத்தத்தில் ராஜாவை கேள்வி கேட்டு அதில் ஏதாவது அரசியல் லாபம் பார்க்கலாமா என்று நினைத்திருந்த பனிமலர் அடிவாங்கி திரும்பியதுதான் மிச்சம்.

©TNNEWS24

Loading...