சீமான் பொய்யை நம்பி ஏமாறாதீர்கள் IAS தேர்வில் வெற்றி அடைந்த ரிஸப் அறிவுரை !

சீமான் பொய்யை நம்பி ஏமாறாதீர்கள் IAS தேர்வில் வெற்றி அடைந்த ரிஸப் அறிவுரை !

திருச்சி., 

சிவில் சர்வீஸ் தேர்வில் இந்தியா அளவில் 23வது இடம் பிடித்த மதுராந்தகத்தை சேர்ந்த இளைஞர் ரிஷப்பிற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து  பாராட்டுகள் குவிந்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்தவர் 26 – வயதான ரிஷப். இன்போஸிஸ் தனியார்  நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், ஐஏஎஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற தீராத கனவு காரணமாக கடந்த 2015- ம் ஆண்டு  தனது வேலையை விட்டு விட்டார்.

தொடர்ச்சியாக கடும் பயிற்சி பெற்று வந்த அவர், சமீபத்தில் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வில்  வெற்றிப்பெற்றார்.

இதையும் படிக்க:  விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை இழிவுபடுத்தும் திமுகவினர் கடும் அதிருப்தியில் தொண்டர்கள்.

இந்தியா அளவில் 23-வது இடம் மற்றும் மாநில அளவில் முதலிடம் பிடித்த அவருக்கு, அவர் படித்த திண்டிவனம் மான்ட்போர்ட் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டுகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையே தனது வெற்றி குறித்து திருச்சியில் உள்ள தனியார் சங்கர் IAS அகாடமியில் பயிலும் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். அவர் சொன்ன காரணங்கள் சீமான் கட்சியினருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

அவர்முதலில் facebook, வாட்சப், போன்ற சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார், அத்துடன் முக்கியமாக வாட்சப்பில் வரும் சீமான் விடீயோக்களை தயவு செய்து பார்க்காதீர்கள் என்று சொல்லி இருக்கிறார். இது அரங்கில் கூடி இருந்தவர்களிடையே கடும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க:  ஸ்டாலினின் கடைசி அம்பும் குறி தவறியது… ஆசிரியர்கள் போராட்டமும் சொதப்பலில் முடிந்தது.

சீமான் பொய்களை பேசிவருவதால் அப்படி கூறினாரா இல்லை சீமான் வன்முறையை தூண்டுவதுபோல் சில நேரங்களில் பேசியதால் அப்படி தவிர்க்க கூறினாரா என்பது பற்றிய விளக்கம் கிடைக்கவில்லை.

இருப்பினும் சீமானின் பொய்யை குறித்துதான் ரிஷப் பேசியிருப்பார் என்று சொல்லி வருகின்றனர்.

©TNNEWS24

Loading...