அடுத்த IPL தொடரில் பங்கேற்பீர்களா என்று கேள்வி கேட்ட நிருபர்? தோனி சொன்ன பதில்

ஹைதராபாத்.,

சென்னை மும்பை அணிகள் மோதிய 11 வது ஐ பி எல் இறுதி போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி சென்னை அணியை வீழ்த்தி 4 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

போட்டிக்கு பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு தோனி தனது பதில்களை அளித்தார், அதனை இங்கு பார்க்கலாம், தான் தற்போது ஐ பி எல் தோல்வி குறித்து ஆராய வேண்டிய கட்டாயத்தில் இல்லை என்றும், அடுத்து தொடங்கவுள்ள உலககோப்பை தொடரை பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், தற்போது எங்களது கவனம் உலகக்கோப்பையை வெல்வதில் இருப்பதாக தோனி தெரிவித்தார்.

இதையும் படிக்க:  இதற்குதான் போராடி ஜல்லிக்கட்டை பெற்றோமா வேதனையில் மாடுபிடி வீரர்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடந்தது என்ன ?

மேலும் இரண்டு அணிகளும் மாறி, மாறி தவறுகளை செய்தோம் அதில் குறைவான தவறுகளை செய்த அணி தற்போது வெற்றிபெற்றுள்ளது என்றும் தோனி கூறினார். அப்போது செய்தியாளர் ஒருவர் அடுத்த ஐ பி எல் போட்டியில் நீங்கள் பங்கேற்பீர்களா என்ற கேள்வி எழுப்பினார்.

அதற்கு சிரித்தபடியே தோனி நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார். ஏற்கனவே இதே போன்று ஒரு கேள்வியை எழுப்பிய பத்திரிகையாளரை அழைத்து அருகில் அமரவைத்து தோனி பதில் கூறியது குறிப்பிடத்தக்கது.

சிறப்பான முறையில் இந்தமுறை தனது பங்களிப்பை வெளிப்படுத்திய தோனியை பத்திரிகையாளர் இப்படி கேள்வி கேட்டது சென்னை ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

இதையும் படிக்க:  சூடுபிடிக்க தொடங்கியது ஐபிஎல் ஏலம் - சிஎஸ்கே வில் யுவராஜ்
Loading...