இன்று அறிவிக்கப்படவுள்ள உலககோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவுள்ள வீரர்கள் யார் யார்?

கிரிக்கெட் உலகின் சர்வாதிகாரி இந்தியா என்று பல நாடுகளும் கூறும் ஒரு இடத்தில் உள்ளது இந்தியா !

கடந்த 2010 -ஆம் ஆண்டு வரை அந்த பெயரை பெற்ற நாடு ஆஸ்திரேலிய அதுவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் வைப்பது தான் சட்டம்.

ஆனால் இன்றைய நிலையில் இந்திய கிரிக்கெட் தான் உலகை ஆள்கிறது , இந்தியா கிரிக்கெட் உலகின் சர்வாதிகாரியாக விளங்குவதாக பாகிஸ்தான் , பங்களாதேஷ் , இலங்கை மட்டுமல்லாமல் இங்கிலாந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் கூறிவருகின்றனர்.

அதற்கு காரணம் கிரிக்கெட் உலகில் இந்தியா செலுத்தும் ஆதிக்கமும் , ஐபிஎல் போட்டியும் தான் போட்டிகளின் அட்டவணையை முடிவுசெய்வது முதல் வீரர்களுக்கு சம்பளம் தருவது வரை இந்தியாவின் தலையீடு சர்வதேச கிரிக்கெட் சங்கத்தில் உள்ளது.

இதையும் படிக்க:  தமிழகத்தில் இந்த ஆண்டு 2019-ல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது!

இந்த ஆண்டு எந்த அணி உலகக்கோப்பையை வெள்ளவாய்ப்புள்ளது ஒரு 2 நாடுகளின் பெயரை சொல்லுங்கள் என்று உலகின் எந்த முலையில் உள்ள கிரிக்கெட் ரசிகரிடம் கேட்டாலும் அவர் கூறும் பதிலில் இந்தியா இருக்கும்.

அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்திய அணியில் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் இன்று வெளியாகவுள்ளது.

அதற்கான கூட்டம் இன்று மும்பையில் நடைபெறுகிறது அதில் தான் யார் யார் உலகக்கோப்பை விளையாட இங்கிலாந்து சல்லப்போகிறார்கள் என்ற முடிவு எடுக்கப்படும்.

உலகக்கோப்பை விளையாட இவர்களெல்லாம் போவார்கள் என்ற நமது கணிப்பு இது !

இந்திய அணியில் 10 வீரர்கள் நிச்சயம் இடம்பெறுவார்கள் அவர்கள்

கேப்டன் கோலி , தோனி , ரோஹித் சர்மா , ஷிகர் தவான் , ஹர்திக் பாண்டியா , ஜஸ்பிரிட் பும்ரா , குலதீப் யாதவ் , மொஹம்மத் ஷமி , மற்றும் கேதார் ஜாதவ் , புவனேஸ்வர் குமார் ,

இதையும் படிக்க:  2019 ஐசிசி கிரிக்கெட் உலககோப்பை காண அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

இவர்களை தவிர மீதம் உள்ள 5 இடங்களை நிரப்ப வாய்ப்புள்ள வீரர்கள் அமத்தி ராயுடு , தினேஷ் கார்த்திக் , கே எல் ராகுல்,விஜய் ஷங்கர் , ரவீந்திர ஜடேஜா , யஸ்விந்தர் சஹால் , ரிஷப் பண்ட் இந்த 7 வீரர்களில் 5 பேர் தான் அந்த இடத்தை பிடிக்கப்போகிறார்கள் அவர்கள் யார் யார் என்பது இன்று இரவுக்குள் தெரிந்துவிடும்.

©TNNEWS24

Loading...