தமிழக பாஜகவில் நடப்பது பிராமணர் – நாடார் பிரச்சனையா? பாஜகவில் இருந்து வெளியேறிவிட்டேனா காயத்திரி விளக்கம்

சமுகவலைத்தளம்.

தமிழக பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகிவிட்டதாக முன்னனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன, அதனை பற்றிய விளக்கம் கேட்பதற்காக தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்று காயத்திரி ரகுராமனை பேட்டி எடுத்திருந்தது. அதில் நெறியாளர் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு காயத்ரி ரகுராம் காரசாரமாக பதில் அளித்திருந்தார் அதனை இங்கு பார்க்கலாம்.

நீங்கள் பாஜகவில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறுகிறார்களே உண்மை என்ன?

நான் பாஜகவில் இருந்து வெளியேறவில்லை சிறிது காலம் என்னை பக்குவ படுத்துவதற்கான ஓய்வை எடுத்துள்ளேன், எனக்கு பிடிக்காத சிலர் தான் வெளியேறிவிட்டதாக புரளியை கிளப்பி விடுகிறார்கள். ஊடகங்களும் என்னிடம் கேட்காமல் செய்தியாக வெளியிடுகின்றன என்றார்.

உங்களுக்கும் தமிழிசைக்கும் என்ன பிரச்சனை என்ற கேள்விக்கு

இதையும் படிக்க:  உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது திருமாவளவனை வெளுத்து வாங்கிய தமிழிசை.

எனக்கும் தமிழிசைக்கும் எந்த பிரச்னையும் இல்லை அவர் கட்சியை வளர்க்க எந்த வேலையும் பார்க்கவில்லை எப்போதும் தன்னை சுற்றி ஒரு கூட்டத்தை வளர்க்கத்தான் அவர் நினைக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் நீங்கள் sv சேகர் போன்றவர்கள் தொடர்ந்து தமிழிசையின் தலைமை மீது குற்றம் சுமத்துகிறீர்கள் பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதோர் பிரச்சனை நிகழ்கிறதா? என்ற கேள்விக்கு நான் தலைமை மீதே குற்றம் சுமத்தினேனே தவிர சமூகத்தின் மீது அல்ல என்னை பிராமினாக அவர்கள் பார்த்தால் நான் அவர்களை நாடாராக பார்க்கவில்லை.

தமிழிசை என்ற தனி நபராகத்தான் பார்க்கிறேன், யாரும் இனி செய்திகள் வெளியிடும்முன் ஒருமுறை என்னிடம் கேட்டு சரியான தகவலை வெளியிடுங்கள் என்று கூறினார் காயத்ரி இதன்மூலம் தான் பாஜகவில்தான் இருப்பதாகவும் சிறிது இடைவெளி எடுத்திருப்பதாகவும் விளக்கம் கொடுத்தார் காயத்ரி.

இதையும் படிக்க:  காங்கிரஸ் தலைவர்கள் யாரும் 15 லட்சம் குறித்து வாயை இனி திறப்பீங்க வச்சு செய்த இளைஞர் பறிபோன திக்விஜயசிங் மானம் !

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...