மீண்டும் ஒரு புல்வாமா தாக்குதல் காஷ்மீரில் பதற்றம் சி.ஆர்,பி.எப் வெளியிட்ட அறிக்கை

மீண்டும் ஒரு புல்வாமா தாக்குதல் காஷ்மீரில் பதற்றம் சி.ஆர்,பி.எப் வெளியிட்ட அறிக்கை

ரம்பன்

புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவம் போன்றே மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சரியாக காலை 10.30 மணியளவில் ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ‘ரம்பன்’ மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மினி சான்ட்ரோ காரில் தேவையான வெடிபொருள்களை நிரப்பி சி.ஆர்.பி.எப் கான்வாயுக்குள் புகுந்து வெடிக்கச் செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது .

தாக்குதலுக்கு பயன்படுத்திய காருக்குள் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் யூரியா பாட்டில்கள் போன்றவை இருந்துள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதையும் படிக்க:  அப்போ இவ்வளவு நாள் தமிழகத்தில் பாஜக பற்றி சமூக ஊடகங்களில் வந்தது எல்லாம் பொய்யா?

இதுகுறித்து சி.ஆர்.பி.எஃப் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை சரியாக 10.30 மணியளவில் ‘பானிகல்’ பகுதியில் வீரர்கள் செல்ல பயன்படுத்தப்படும் கான்வாயில் தனியார் கார் வெடி பொருள்களுடன் புகுந்து வெடித்தது.

இதில், கான்வாயில் வந்துகொண்டிருந்த சி.ஆர்.பி.எஃப் வாகனம் சேதமடைந்தது. சம்பவத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் . இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 14- ம் நாள் அன்று தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். அதனை தொடர்ந்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றிருப்பது, மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  51 நாடுகளுக்கு தகவல் சொல்லிவிட்டு இரவோடு இரவாக 10 ஆண்டுகளுக்கு பிறகு பிரமாண்ட போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவம்.

©TNNEWS24

Loading...