பிள்ளையார் குறித்து அந்த பேச்சு பேசிப்புட்டு இப்போ ஜோதிமணி பண்ற வேலையை பார்த்தீங்களா?

பிள்ளையார் குறித்து அந்த பேச்சு பேசிப்புட்டு இப்போ ஜோதிமணி பண்ற வேலையை பார்த்தீங்களா?

சென்னை.,

காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிடும் ஜோதிமணி குறித்து விமர்சனங்கள் எழ தொடங்கியுள்ளன. திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எப்போதும் இந்துக்கள் பண்டிகைகள், மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து விமர்சனம் செய்துவிட்டு தேர்தல் வருகிற நேரத்தில் மட்டும் நானும் இந்துதான் என்று நாடகமாடுவதாக பல குற்ற சாட்டுகள் இன்று வரை உள்ளன.

கடந்த ஆண்டு சென்னை IIT கல்லூரியில் மத்திய அமைச்சர் நிதின்கட்காரி மற்றும் பொன்ராதா கிருஷ்ணன் பங்கேற்ற கூட்டத்தில் கடவுள் வாழ்த்து பாடலாக கணபதி பாடல் பாடப்பட்டது, அதற்கு தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இதையும் படிக்க:  பாஜகவை வீழ்த்துவதே எங்கள் இலக்கு என்ற சீமான் உங்கள் நிரந்தர எதிரி காங்கிரஸ் இல்லையா என்று கேட்ட செய்தியாளர் அசிங்கப்பட்டு புதுக்கதை விட்டு சமாளித்த சீமான்

குறிப்பாக முன்னணி தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடைபெற்றன அதில் பங்கேற்ற ஜோதிமணி எப்படி ஒரு மத சார்பற்ற நாட்டில் இந்து மத பாடலை படலாம், இந்த மத்திய அரசு அனைத்து அரசு, நிறுவனங்களையும் மத ரீதியாக பிரிகிறது, என்று குற்றம் சாட்டினார்.

அத்துடன் இதனை அரங்கேற்றிய கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கருத்தினை பதிவு செய்திருந்தார். மேலும் பொது அரசியலில் இருப்பவர்கள் எந்த மதத்திற்கும் ஆதரவாகவும் அதன் அடையாளங்களை வெளிப்படுத்த கூடாது என்றும் மற்றொரு நிகழ்ச்சியில் சொல்லி இருந்தார் ஜோதிமணி.

இப்படி பேசிவிட்டு தற்போது கரூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக களமிறங்கும் ஜோதிமணி தனது தொகுதி தேர்தல் பணிமனை திறப்பு விழாவிற்கு முன்னர், அங்குள்ள பிள்ளையார் கோவிலில் கும்பிட்டுவிட்டு, நெற்றி நிறைய விபூதியையும், குங்குமத்தையும் இட்டு வந்திருக்கிறார்.

இதையும் படிக்க:  தெறிக்கவிடும் தமிழக அரசு பயத்தில் அரசு ஆசிரியர்கள் , அரசை ஆதரிக்கும் இளைஞர்கள்

இதனை பார்த்த பலரும் இப்போது மட்டும் ஒரு மதத்தின் அடையாளத்தை ஜோதிமணி எதிர்காக பின்பற்றுவது தவறில்லையா என்றும், இல்லை இந்த நாடகமெல்லாம் ஏப்ரல் – 18 வரை மட்டும்தானா என்று சந்தேகத்தையும் எழுப்புகின்றனர்.

ஒரு சிலரோ யாரெல்லாம் இந்துமதம் இல்லை இது பெரியார் மண் என்று சொன்னார்களோ இப்போது அவர்கள் நெத்தியில் குங்குமம், விபூதி இல்லாமல் மக்களிடம் ஓட்டு கேட்கமுடியாத நிலையை தற்போது பாஜக உருவாக்கி இருப்பதாகவும் பேசிவருகின்றனர்.

©TNNEWS24

Loading...