கேள்வி கேட்டவரை மக்கள் முன்னிலையில் அடித்த ஜோதிமணி.. ஆதரவாளர்கள் வெறியாட்டம்..

கேள்வி கேட்டவரை மக்கள் முன்னிலையில் அடித்த ஜோதிமணி.. ஆதரவாளர்கள் வெறியாட்டம்..

அரவக்குறிச்சி.,

கரூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ், திமுக கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அவருக்கு ஆதரவாக சமீபத்தில் தினகரன் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது ஜோதிமணியை வெற்றி பெறவைத்து கரூர் தொகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றுவேன் என ஸ்டாலினிடம் சபதம் செய்திருக்கிறாராம் செந்தில் பாலாஜி எனவே எங்கு வாக்கு சேகரிக்க சென்றாலும் அவரது ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.

இந்த சூழலில் நேற்று ஜோதிமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இலங்கையில் தமிழ் இனத்தை கொன்று குவித்த ராட்சசி குழுவிற்கு ஆரத்தி எடுப்பதா என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிக்க:  பாஜக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு வேட்பாளர்கள் யார்? முழுவிபரம்?

அவ்வளவுதான் அவரை ஜோதிமணி செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் கடுமையாக தாக்க ஆரம்பித்துவிட்டனர். இதை ஜோதிமணி நிறுத்தாமல் வேடிக்கை பார்த்ததுதான் கொடுமை.

இந்த ஜோதிமணிதான் சிறிது நாட்களுக்கு முன்னர் விமானத்தில் தமிழிசையை நோக்கி கத்திய சோபியாவிற்கு ஆதரவாக இது அவரவர் கருத்து சுதந்திரம் என்று மேடை தோறும் கத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கருத்து சுதந்திரம் எங்கே போனது என்று கேள்விகள் ஜோதிமணியை நோக்கி நீள்கின்றன..

வீடியோ உதவி K. K மதுரை

Jothimani team attack

©TNNEWS24

Loading...