மதுரையில் கமல் ரசிகர்களை தெறிக்கவிட்ட இந்து முன்னணியினர், சினேகன் ஜஸ்ட் மிஸ் !

திருப்பரங்குன்றம்.,

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்ற கமலின் சர்ச்சை கருத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்துவருகின்றன. குறிப்பாக நாடு முழுவதும் கமலின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடி கமலின் கருத்திற்கு எந்த இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று பதில் அளித்திருக்கிறார், மோடி பதில் அளிக்கும் வகையில் கமலின் கருத்து இந்திய அளவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் வேட்பாளரை ஆதரித்து கமல் பிரச்சாரம் செய்ய மதுரை வந்தடைந்தார், அவரை வரவேற்க தென் மாவட்டத்தில் உள்ள அனைத்து கமல் ரசிகர்களும் வருமாறு அழைப்பு கொடுக்கப்பட்டது.

இதையும் படிக்க:  எங்களை மதிக்காத திமுகவுடன் நாங்கள் எப்படி கூட்டணி வைப்பது.! ராமதாஸ் காட்டம்.

இந்நிலையில் கமல் ரசிகர்கள் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வாகனத்தில் வந்தபோது அவர்களை வழிமறித்த இந்து முன்னணியினர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அடிதடியாக மாறியது, குறிப்பாக இரண்டு வாகனங்களில் வந்த கமல் ரசிகர்களை இந்து முன்னணியினர் விரட்டி அடிக்க அந்த பகுதியே சற்று பதற்றமாக காணப்பட்டிருக்கிறது.

இதே வாகனத்தில் கமலை வரவேற்க சினேகன் வருவதாக இருந்ததாம், அவர் வராததை அடுத்து அதிர்ஷ்ட வசமாக தப்பியுள்ளார்.

முன்பெல்லாம் இந்துக்கள் குறித்து யாரேனும் விமர்சனம் செய்தால் அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் தற்போது அனைத்து நிகழ்வுகளுக்கும் உடனடியாக இந்துக்கள் பதிலடி கொடுப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிக்க:  கமல்ஹாசனை வெளுத்து வாங்கிய பிரபல நடிகர் ! வெட்கமாக இல்லை கழுவி ஊத்திய H. ராஜா

இதற்கு முன்னர் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீரமணியை திருச்சியை சேர்ந்த இந்து அமைப்புகள் விரட்டி அடித்தது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...