தந்தை பெயர் சர்ச்சையால் நிறுத்தி வைக்கப்பட்டதா கனிமொழி வேட்புமனு நடந்தது என்ன?

தந்தை பெயர் சர்ச்சையால் நிறுத்தி வைக்கப்பட்டதா கனிமொழி வேட்புமனு நடந்தது என்ன?

தூத்துக்குடி.,

திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மு க. ஸ்டாலின் அவரது சகோதரியுமான கனிமொழி தற்போது திமுக சார்பில் தூத்துக்குடியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் போட்டியிடுகிறார்.

இருவரும் நேற்று வேட்புமனுவினை தாக்கல் செய்ய சென்றிருந்த போது தமிழிசையின் வேட்புமனு ஏற்கப்பட்டது ஆனால், திமுக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த கனிமொழியின் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டு, நீண்ட இழுபறிக்கு பின்னரே ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது குறித்து பல செய்திகள் வெளியில் பரவினாலும், என்ன நடந்தது என மற்றொரு தகவலும் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது, அதில் வேட்புமனு பரிசீலனையின் போது, திமுக உறுப்பினர் கனிமொழி தனது தந்தை பெயரை குறிப்பிட்டதில் சர்ச்சை எழுந்தாகவும், பேச படுகிறது.

இதையும் படிக்க:  பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி யாருக்கு வெளியானது தேர்தலுக்கு பிந்தைய அதிரடி சர்வே !
IMAGE Credit – NEWSTN TEAM

குறிப்பாக மாநிலங்களவை உறுப்பினர், கனிமொழியின் பிறப்பு சான்றிதழில் அவரது தந்தை பெயர், M. கருணாமுர்த்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் தாய் பெயர் ராஜி என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் தனது வேட்புமனுவில் கருணாநிதியின் மகள் என குறிப்பிட பட்டிருப்பதால் சர்ச்சை எழுந்ததாகவும் அதனால் வேட்புமனு பரிசீலனை நீண்ட நேரம் நிறுத்திவைக்கப்பட்டு, அதன் பிறகே ஏற்று கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த தகவல் தற்போது வெளியாகி இணையத்தில் அதிகம் நபர்களால் பகிரப்பட்டு வருகிறது.

©TNNEWS24

Loading...