இன்று செய்தியாளர் கார்த்திகை செல்வனுக்கும் பதிலடி கொடுத்த அமைச்சர், தமிழகத்தில் இதுதான் முதல் முறை .

இன்று செய்தியாளர் கார்த்திகை செல்வனுக்கும் பதிலடி கொடுத்த அமைச்சர், தமிழகத்தில் இதுதான் முதல் முறை .

விவாதமேடை.,

சுதந்திர இந்தியாவின், முதல் தீவிரவாதி இந்து என்ற கமலின் பேச்சிற்கு பல்வேறு தரப்பினர் இடையே வலுவான எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல் இவ்வாறு பேசி கொண்டிருந்தால் முடிவுதான் என்ன அவரின் கொழுப்பேறிய நாக்கை இந்துக்கள் அறுக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த சூழலில் கமலின் கருத்திற்கும், அமைச்சரின் கருத்திற்கும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பவே தொலைக்காட்சிகளில் விவாத பொருளானது, அதனை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சி அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் கேள்வி கேட்டது, அதில் செய்தியாளர் கார்த்திகை செல்வன் எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர் அளித்த பதில்கள் இந்து மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

இதையும் படிக்க:  எந்த செய்தி சானல்களை தமிழர்கள் விரும்பி பார்க்கிறார்கள் எந்த செய்தி சானல்களை வெறுக்கிறார்கள் தெரியுமா ? BARC புள்ளி விவரம் சொல்வது என்ன ?

ஒரு அமைச்சர் எவ்வாறு இப்படி பேசலாம் என்ற கேள்விக்கு தமிழகத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் இப்படி பேசுவது அரசியல் நாகரீகமா என்று கேட்க, வெளிப்படையாக வெளுத்து வாங்கி இருக்கிறார் பாலாஜி. குறிப்பாக இப்படி தொடர்ந்து இந்துக்களை விமர்ச்சித்து கொண்டே போனால் யார் தட்டி கேட்பது, தி க, திமுகவில் தொடங்கி எல்லாரும் இந்துக்களை திட்டுகிறான், ஏன் மற்ற மதத்தை பேச மறுக்கிறான்.

எந்த மதத்தையும் யாரும் துன்புறுத்த கூடாது, தவறாக பேசக்கூடாது என்ற போது கமலுக்கு ஏன் இந்த மதவெறிப்பேச்சு, மொத்தத்தில் நான் பேசியது தவறில்லை, கமல் தன்னுடைய கருத்தை திரும்ப பெற்றால், நானும் பெறுவேன், இல்லை என்றால் முடியாது என்று மறுத்துவிட்டார்.

இதையும் படிக்க:  ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெறபோவது யார் ?

அதோடு நில்லாமல் இனி இந்துக்களை எவன் விமர்ச்சித்தாலும் என்னுடைய பதிலடி தொடரும் என்று அழுத்தம் திருத்தமாக செய்தியாளர் கார்த்திகை செல்வனின் பேச்சிற்கு பதிலடி கொடுத்துவிட்டார்.

தமிழகத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக ஒரு அமைச்சர் செய்தியாளர்கள் முன்னிலையில் இனி இந்துக்களை விமர்ச்சித்தால் என்னுடைய பதிலடி தொடரும் என்றும் வெளிப்படையாக அறிவித்திருப்பது இதுவே முதல்முறை.

தங்களுக்கு ஆதரவாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக இணையத்தில் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் தங்கள் எதிர்ப்பினையும் பதிவு செய்து வருகின்றனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

இதையும் படிக்க:  ஐவா நிறுவனத்தின் கருத்து கணிப்பு தலைகீழாக மாறும் தமிழக அரசியல் களம் , அதிமுக கூட்டணி எத்தனை இடங்களை கைப்பற்றும் என்று தெரியுமா ?
Loading...