சீமான் பாரதி ராஜாவை விளாசிய கஸ்தூரி!

சென்னை.,

கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின்போது தன் கட்சி தொண்டர்களை தூண்டிவிட்டு ரசிகர்களை அடித்து காயப்படுத்தி , மைதானத்தில் கலவரம் செய்த சீமான் , பாரதிராஜா உள்ளிட்ட தமிழ் தேசியவாதிகளை ட்விட்டரில் வெளுத்து வாங்கியுள்ளார் நடிகை கஸ்தூரி.

உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட கிரிக்கட் தொடரான ஐபிஎல் தொடரின் 12 டாவது சீசன் இன்று சென்னையில் துவங்குகிறது.

இன்று நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியும் , பெங்களூரு அணியும் மோதுகின்றன அதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் 4000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் , இந்த நிலையில் கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த ஆண்டு காவிரிக்காக மக்கள் போராடியதை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கலவரம் செய்த சீமான் உள்ளிட்டோர்
இந்த ஆண்டு அமைதியாக இருப்பது ஏன் ?

இதையும் படிக்க:  2014 -ல் கடைசியாக சென்னையை வென்றது RCB இன்று வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது

இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறதா என்ன ?
முதல் ஆட்டமே நமக்கு தண்ணீர் தராத கர்நாடகத்துடன் தான் உங்களுக்கு தடுத்து நிறுத்த தைரியம் உள்ளதா..,

நீங்கள் அதை செய்தால் உங்களுக்கு விழும் அந்த 100 ஓட்டும் விழாது , ஐபிஎல் போட்டியை தடுத்தல் தண்ணீர் வரும் என்ன ஒரு புத்திசாலித்தனம்,

கடந்த ஆண்டு சென்னையில் போட்டிகள் நடக்காமல் தடுத்தீர்கள் தண்ணீர் வந்துவிட்டதா , மக்களை தூண்டிவிட்டு அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள், என்று கூறியுள்ளார்.

©TNNEWS24

Loading...