கதிர் ஆனந்தின் தேர்தல் வாழ்கை முடிந்தது அறிக்கை வெளியிட்ட தேர்தல் ஆணையம் ! திருப்பி தாக்கிய பிரசன்னா?

கதிர் ஆனந்தின் தேர்தல் வாழ்கை முடிந்தது அறிக்கை வெளியிட்ட தேர்தல் ஆணையம் ! திருப்பி தாக்கிய பிரசன்னா?

வேலூர்.,

வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், தேர்தலில் போட்டியிடுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது உதவியாளர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், மற்றும் பொருள்கள் குறித்து விரிவான அறிக்கையினை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி டெல்லி தேர்தல் தலைமை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இன்று தேர்தல் வேட்பாளர்களின் வரவு செலவுகளை கவனிக்கும் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார் அதன்மூலம், துரைமுருகனின் வீடுகளில் கைப்பற்றப்பட்ட பணத்தினை, கதிர் ஆனந்தின் தேர்தல் செலவு கணக்குகளில் சேர்த்திருப்பதாக வழக்கினை பதிவு செய்துள்ளார்.

இதையும் படிக்க:  தமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி பாஜக,பாமக,தேமுதிக கூட்டணியில் இணைத்தனர்

இதன்மூலம் கதிர் ஆனந்த் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்பு அதிகரித்துள்ளது, மேலும் வேட்பாளரின் வரவு, செலவு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதால், அவர் ஒருவேளை வெற்றிபெற்றாலும் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்பதே எதார்த்தம்.

நிலைமை இப்படி இருக்கையில் துரை முருகனின் அரசியல்வாழ்க்கை,மற்றும் தனது மகனின் அரசியல் வாழ்க்கை இதோடு முடிந்துவிடுமோ என்ற கடுமையான பதற்றத்தில் இருக்கிறாராம் துரைமுருகன்.

இதற்கிடையில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைமையிடம் மனு அளித்திருந்த பிரசன்னாவை துரைமுருகன் விரட்டி விட்டதாக பரவலாக பேச்சுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன, இதனால் வேலூர் தேர்தல் களத்தில் பிரசன்னா வரவே கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளாராம் துரைமுருகன்.

தற்போது தேர்தலில் கதிர் ஆனந்த் போட்டியிடுவது சந்தேகம் ஆகியுள்ள நிலையில், மிகுந்த உற்சாகத்தில் உள்ளாராம் பிரசன்னா ஆனால் தேர்தல் முடிந்ததும் முதலில் பிரசன்னாவை சிறப்பாக கவனிக்க துரைமுருகன் ஏற்பாடு செய்துள்ளாராம்.

இதையும் படிக்க:  இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்

©TNNEWS24

Loading...