ஸ்டாலினை சந்திக்கும் கே சி ஆர் என்ன செய்வதென்று தெரியாமல் பீதியில் காங்கிரஸ் அடுத்து என்ன நடக்கும்?

மக்களவை தேர்தல் 7- கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது 7 -ஆம் கட்ட தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் பாஜக வலுவான நிலையில் இருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான அளவு இடம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் சில கட்சிகள் உள்ளன.

காங்கிரஸ் கட்சியோ பலவீனமாக உள்ளது அவர்கள் பல கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு கூட்டணியை அமைத்தால் மட்டுமே ஆட்சி என்பது சாத்தியம்.

ஆனால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று மாலை திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க உள்ளார் , ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணியில் திமுக இடம்பெற்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:  பால் கம்பெனியை காப்பாற்ற அவசரமாக தமிழகம் வந்த சந்திரபாபு நாயுடு ! மோடியை எதிர்க்க இதுதான் காரணமா?

இந்த சந்திப்புக்கு ஸ்டாலின் சம்மதம் தெரிவித்ததால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மேலும் இப்படி ஒரு 3 ஆவது அணி அமைந்தால் அது பாஜக ஆட்சி அமைக்கவே சாதகமாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர்.

எப்படியேனும் பாஜக வெறுப்பு , பாஜக எதிர்ப்பு என்று கூறி அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து ஆட்சியமைத்து விடலாம் என்று காங்கிரஸ் நினைத்துக்கொண்டிருந்தது.

அவர்களுக்கு இந்த 3 ஆவது அணி பெரும் தலைவலியாக உள்ளது , 5 முக்கிய அமைச்சர் பதவிகளை கொடுத்து , தமிழக அரசை கலைப்பதாக உத்திரவாதம் தந்தால் திமுக எளிதில் 3 ஆவது அணிக்கு தாவிவிடும்.

இன்று மலாய் சந்திரசேகர ராவ் ஸ்டாலினை சந்தித்த பிறகு சில முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:  உலக அளவில் கேவலப்பட்ட திமுக ! பழிக்கு பழிவாங்கிய பாஜக !

மேலும் பாஜக கூட்டணி 272 தொகுதிகளைவிட குறைவாக பெற்றால் மட்டுமே இந்த 3 ஆவது அணி அமைய வாய்ப்புகள் உள்ளன , பாஜக கூட்டணி 272 ± இடங்களை கைப்பற்றிவிட்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சி தொடரும் எனவே ஸ்டாலின் -சந்திரசேகராவ் சந்திப்பு, எதை பற்றியும் கவலை இல்லை என்று கண்டுகொள்ளாமல் உள்ளதாம் பாஜக.

©TNNEWS24

3rdசெய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...