பினராயி விஜயனின் அடக்குமுறையை காலில் போட்டு மிதித்து வெளியேவந்தான் ராமசந்திரன். இப்போது தெரிகிறதா இந்துக்களின் ஒற்றுமை !

பினராயி விஜயனின் அடக்குமுறையை காலில் போட்டு மிதித்து வெளியேவந்தான் ராமசந்திரன். இப்போது தெரிகிறதா இந்துக்களின் ஒற்றுமை !

திருச்சூர்.,

கேரளாவில் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்று திருச்சூரில் உள்ள வடக்கு நாதர் கோவில் பூரம் திருவிழா. பூரம் திருவிழா உலக புகழ் பெற்றது, இங்கு நடைபெறும் யானைகள் ஊர்வலம் மிகவும் பிரசித்தி பெற்றது.

யானைகள் ஊர்வலத்திற்கு தலைமை தாங்குவதற்கு என்றே ராமசந்திரன் என்ற 10 அடி உயரம் கொண்ட யானை வளர்க்கப்பட்டு வருகிறது, இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ராமச்சந்திரன் யானை இந்த ஆண்டு திருவிழாவில் பங்கேற்க கூடாது என்று கேரள அரசு தடை விதித்தது.

அதற்கு காரணமாக கேரள அரசு கூறியது ராமச்சந்திரன் யானைக்கு பார்வை குறைபாடு உள்ளது என்றும், அதற்கு மதம் பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எனவே ராமச்சந்திரன் பூரம் திருவிழாவில் பங்கேற்க கூடாது என்று சட்டம் போட்டது.

இதையும் படிக்க:  பொறுத்து பொறுத்து பார்த்த மேற்குவங்க மக்கள் மம்தாபானர்ஜியை விரட்டி அடித்தனர்.

இந்து சங்கங்கள் அமைப்புகள் ஒன்று சேர்ந்து கோரிக்கை வைத்தும், கம்யூனிஸ்ட் அரசாங்கம் மசியவில்லை அதனை தொடர்ந்து, ராமச்சந்திரன் பங்கேற்காத ஊர்வலத்தில் மற்ற யானைகளும் பங்கேற்காது என்று யானை சங்கங்கள் அறிவிக்க போராட்டம் தீவிரமடைந்தது.

Credit – janam tv

உடனடியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் பூரம் திருவிழாவில் ராமசந்திரன் பங்கேற்பது குறித்து திருச்சூர் ஆட்சியரே முடிவு செய்யலாம் என்ற தீர்ப்பு வழங்கியது. அதனை தொடர்ந்து ஒன்று சேர்ந்த இந்து மக்களின் உணர்வுகளை அறிந்த ஆட்சியர் ராமச்சந்திரனை விழாவில் பங்கேற்க அனுமதி அளித்தார்.

ஏற்கனவே சபரிமலை விவகாரத்தில் இந்து மக்கள் மிக பெரிய கொந்தளிப்பில் உள்ள நிலையில் தற்போது திரிச்சூர் கோவில் விவகாரத்திலும் தடை ஏற்படுத்த நினைத்த கம்யூனிஸ்ட் அரசின் அராஜக போக்கை ஒன்று சேர்ந்த இந்து மக்கள் வென்று எடுத்துள்ளனர். தற்போது இந்துக்கள் ஒன்றிணைந்தால் என்ன ஆகும் என்பதை பினராயி விஜயன் அறிந்திருப்பார்.

இதையும் படிக்க:  நீங்களே என்னை அரசியலுக்குள் இழுத்துவிட்டுருவீங்க போலயே மதுரை மீனாட்சி அழகர் துணையுடன் வருகிறேன் எதிரிகளுக்கு பாண்டே பதில் வீடியோ

இனியும் எங்கள் கலாச்சாரம், மத நடைமுறைகளில் கம்யூனிஸ்ட் அரசாங்கம் மூக்கை நுழைத்தால், யாரும் எதிர்பார்க்காத அளவு பல மடங்காக திருப்பி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

©TNNEWS24

Loading...