ஆளுநராக இருந்தும் 500 ரூபாய் மட்டுமே சொத்து யார் இந்த கும்மனம் ராஜசேகர் ஏன் இவரை கேரள மக்கள் கொண்டாடுகிறார்கள் !

ஆளுநராக இருந்தும் 500 ரூபாய் மட்டுமே சொத்து யார் இந்த கும்மனம் ராஜசேகர் ஏன் இவரை கேரள மக்கள் கொண்டாடுகிறார்கள் தெரியுமா?

ஆட்சியில் இருக்கும் கட்சியின் மாநில தலைவர் , ஒரு மாநிலத்தின் ஆளுநர் , 50 ஆண்டுகால அரசியலுக்கு பின்னர் அவரிடம் உள்ள சொத்து 512 ரூபாய் மட்டும்.

கேரள மாநிலத்தை சார்ந்தவர் கும்மனம் ராஜசேகரன் அவர்கள் 1952 – ஆம் ஆண்டு பிறந்த இவர் தன் சிறு வயதிலேயே RSS அமைப்பில் சேர்ந்து பணியாற்றினார்.

பின்னர் பாஜகவுக்கும் வந்த இவர் கேரள மாநில பாஜக தலைவராகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார் , பின்னர் மிசோரம் மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்தார்.

இதையும் படிக்க:  நிறை மாத கர்ப்பிணி பெண்ணை தாக்கிய கம்யூனிஸ்ட்கள்?

இவர் மிசோரம் மாநிலத்தின் 18 ஆவது ஆளுநராக இருந்தார் அவர் ஆளுநராக இருந்த போது அவருக்கு கிடைத்த மாத சம்பளத்தை அப்படியே ஒரு அனாதை ஆசிரமத்திற்கு வழங்கிவிட்டார்.

அவரிடம் இப்போது எந்த சொத்துக்களும் இல்லை அவரிடம் உள்ள கையிருப்பு தொகை வெறும் 512 ரூபாய் மட்டுமே.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் தன் சொந்த மாநிலமான கேரளத்தில் இருந்து கும்மனம் ராஜசேகரன் போட்டியிடவுள்ளார்.

மற்ற கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தலைவர்களை காட்டிலும் ஏன் கும்மனம் ராஜசேகரன் விரும்பத்தக்க தலைவராக கேரளாவில் வலம் வருகிறார் என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஆனால் போட்டியிடுவதற்கான டெபாசிட் தொகையை கட்ட அவரிடம் பணம் இல்லாததால் அவருக்காக 25000 டெப்பாஸிட் தொகையைய் கட்டியது ஹரிவராசனம் சாரிட்டபிள் டிரஸ்ட்டு பாலாமணியம்மா என்பவர்..

இதையும் படிக்க:  எதிர்த்து போட்டியிட வேட்பாளர் இல்லை அன்னபோஸ்ட்டாக வெற்றிபெற்றது பாஜக

அதே போல கேரள மாநிலத்தை சார்ந்த மற்றொரு பாஜக வேட்பாளர் தான் கே. சுரேந்திரன் இவரும் கும்மனம் ராஜசேகரன் அவர்களை போல ஒரு தூய்மையான அரசியல்வாதி

இவரும் தேர்தலில் போட்டியிட டெபாசிட் கட்ட பணம் இல்லாததால் 25000 டெப்பாஸிட் தொகையை கட்டியது சபரிமலை போராட்டத்தில் பங்கேற்று கம்யூனிஸ்டுகளால் கல்லெறிந்து கொல்லப்பட்ட. திரு சந்திரன் அவர்களின் குடும்பம்….

தற்போது கும்மனம் ராஜசேகரனை கேரளாவின் இளைஞர்கள் பலரும் தங்கள் விரும்பும் நபராக தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...