#video படு கேவலமாக கிருஷ்ணரை விமர்ச்சித்த வீரமணி காலில் விழவில்லை என்றால் விரட்டி அடிப்போம் சொன்னபடி செய்த யாதவ அமைப்புகள் !

படு கேவலமாக கிருஷ்ணரை விமர்ச்சித்த வீரமணி காலில் விழவில்லை என்றால் விரட்டி அடிப்போம் சொன்னபடி செய்த யாதவ அமைப்புகள் !

சென்னை.

தேர்தல் நேரம் என்பதால் அனைவரும் தங்கள் கட்சிகள் செய்த சாதனைகள் மற்றும் எதிர்க்கட்சிகள் செய்த தீமைகளை பட்டியலிட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

ஆனால் திராவிட கழகம் தொடர்ந்து ஒரு சமுதாயத்தின் மீது வேண்டுமென்றே களங்கத்தை கற்பிக்கும் வகையில் செயல்படுவதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை இந்து கடவுள் கிருஷ்ணரை அவமானப்படுத்தும்படி பேசியுள்ளார் வீரமணி.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுடன் கிருஷ்ணரை இணைத்து பேசியது மட்டுமல்லாமல், பாலியல் குற்றவாளி, காவாளி என்று மிகவும் ஒருமையில் பேசியுள்ளார் திராவிட கழக தலைவர் வீரமணி.

இதையும் படிக்க:  இந்துக்கள் ஏமாளிகள் அவர்களை திருநீறு பூசியே ஏமாற்றிவிடுவோம் மற்றவர்களை முடியுமா திமுக முன்னாள் அமைச்சர்

குறிப்பாக இந்து சமுதாய மக்கள் மத்தியில் இந்த வீடியோ பதிவு கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் யாதவ மகா சபை போன்ற அமைப்புகள் தொடர்ந்து வீரமணியை கடுமையாக எச்சரித்து வருகின்றனர், வீரமணி கிருஷ்ணர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவில்லை என்றால், திராவிட கழகத்துடன் கூட்டணியில் உள்ள திமுகவை அனைத்து தொகுதிகளிலும் வீழ்த்துவோம் என்றும் எச்சரிக்கை செய்தனர்.

முழு விடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும் –

ஆனால் இந்த நிமிடம் வரை வீரமணி எந்த மன்னிப்பும் கேட்கவில்லை, இதனால் கோபமடைந்த இளைஞர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் முஸ்லீம் லீக் வேட்பாளர் வாகனத்தில் ஓட்டு கேட்டு செல்லும் போது அதில் வீரமணி புகைப்படம் இருந்ததால் தங்கள் பகுதியில் வாக்கு சேகரிக்க கூடாது என்று விரட்டி அடித்துள்ளனர்.

இதையும் படிக்க:  சுப்ரமணிய சாமி மற்றும் ரஜினிகாந்தை இணைத்து வைரலாக பரப்பப்படும் செய்தி உண்மையானதா?

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திராவிட கழகத்தின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த இந்து மக்களின் மத உணர்வை புண் படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் இதனை பாஜக இந்து அமைப்புகளை தவிர இதுவரை ஒருவரும் கண்டிக்காதது பலரிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

Loading...