உயிருடன் உள்ளார் விடுதலைப்புலிகள் தலைவர் ஊடகங்களில் வந்ததால் இலங்கையில் பரபரப்பு.

கடந்த 2009- ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

ஆனால் தற்போது விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விடுதலை புலிகள் இயக்கத்தின் உளவு பிரிவு தலைவராக விளங்கியவர் பொட்டு அம்மான் என்கின்ற சண்முகலிங்கம் சிவசங்கர், இவர் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு மூளையாக செயல்பட்டார்.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட நிலையில் அவரின் இறந்த உடலின் புகைப்படம் மற்றும் விடியோவை வெளியிட்டது இலங்கை.

ஆனால் பொட்டு அம்மானின் இறந்த புகைப்படத்தை வெளியிடவில்லை ஆனாலும் அவர் இறந்துவிட்டார் என்றே இலங்கை அரசு கூறிவந்தது.

இதையும் படிக்க:  வீடியோ மாமியார் மருமகள் சண்டையை பார்க்க வசதிசெய்து தருவேன் கார்த்தி தேர்தல் வாக்குறுதி. சிரிப்பாய் சிரிக்கும் சிவகங்கை மக்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் சுப்ரமணிய சாமி அளித்த பேட்டியில் ராஜிவ் காந்தி கொலையில் சம்மந்தப்பட்ட ஒருவர் இத்தாலியில் இருப்பதாக கூறினார்.

அந்த நபர் பொட்டு அம்மான் தான் என்ற செய்தியை தெரிவித்தார் சுப்ரமணியசாமி, எதையும் ஆதரத்துடன் சுப்ரமனியசாமி தெரிவித்து வந்துள்ளதால், இந்த செய்தியை பல இலங்கை ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து இலங்கையில் பரபரப்பு நிலவுகிறது.

உண்மையாக இருக்குமோ?

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...