ஜெய்ஸ்ரீராம் கோசம் போட்டவர்களை மிரட்ட காரிலிருந்து இறங்கிய மம்தா முடிவில் இப்படி நடக்கும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்?

ஜெய்ஸ்ரீராம் கோசம் போட்டவர்களை மிரட்ட காரிலிருந்து இறங்கிய மம்தா முடிவில் இப்படி நடக்கும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்?

மேற்குவங்கம்,

மேற்குவங்கம் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்குவங்கம் முதல்வருமாகிய மம்தா பானர்ஜி தற்போது செல்லும் இடங்களில் சொந்த மாநில மக்களிடம் அதிகம் பின்னடைவை சந்திக்கிறார் என்று முன்பே சொல்லி இருந்தோம் அது தற்போது மேலும் ஒருபடி அதிகமாயுள்ளது.

டார்ட்டா பழங்குடியினர் வசிக்கும் பகுதி கம்யூனிஸ்ட்கள் கைவசம் இருந்து முதலில் திரிணமூல் காங்கிரஸ் கைவசம் வந்த பகுதி கடந்த தேர்தல்வரை மம்தாவின் கோட்டையாகவே இருந்துவந்துள்ளது. இங்கு பணிப்பெறி என்னும் இடத்தில் பிரச்சாரகூட்டத்திற்கு மம்தா ஏற்பாடு செய்திருந்தார்.

இதையும் படிக்க:  சிதம்பரத்தின் ஊழலை பட்டியல் இட்ட SG. சூர்யா சிவகங்கையில் வைரல் ஆகும் பேச்சு

அந்த கூட்ட திடல் சிறியது 30 ஆயிரம் மக்கள் திரண்டாலே நிரம்பிவழியும் இந்த சூழலில் மம்தாவின் கூட்டத்திற்கு ஆட்கள் வரவு மிக மிக குறைவாக இருந்ததால் கூட்டத்தை பாதியில் முடித்துவிட்டு மம்தா கொல்கத்தா திரும்பினார்.

அப்போது டார்ட்டா பகுதியில் இளைஞர்கள் கையில் பாஜக கொடியுடன் ஜெய்ஸ்ரீராம் என்று கோசம் போட மம்தா காரில் இருந்து இறங்கி அந்த இளைஞர்களை நோக்கி தொலைத்துப்புடுவேன் தொலைத்து என்று மிரட்டுகிறார்.

ஆனால் கூட்டத்தில் உள்ள இளைஞர்கள் அது 23 அன்று தெரியும் என்று முணுமுணுத்த குரலில் சொல்ல மம்தா என்ன செய்வது என்று தெரியாமல் திரும்பி விட்டார். ஒருகாலத்தில் இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட மம்தா, மேற்கு வங்கத்தின் நிரந்தர முதல்வர் என்று பேசப்பட்டார் ஆனால் இன்று அவரது நிலைமை இப்படி ஆகும் என்றோ, சொந்த மாநில மக்களே நம்மை விரைவில் புறக்கணிப்பார்கள் என்றோ, முடிவில் நமது நிலைமை இப்படி ஆகும் என்றோ கனவிலும் மம்தா நினைத்துக்கூட பாத்திருக்க மாட்டார்.

இதையும் படிக்க:  நள்ளிரவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை ஸ்டாலின் போன்ற கேவலமான நபரை...

video

விடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...