பெரியாரிஸ்டுகளை கிழித்தெடுத்த மரிதாஸ் இதற்கு வீரமணி விளக்கம் சொல்ல முடியுமா ?

சமூகவலைத்தளங்களில் ஆதரத்துடன் தனது கருத்து மற்றும் எதிர்தரப்பினரின் பொய் குற்றசாட்டுகளை மாரி தாஸ் சரியாக எடுத்து சொல்ல கூடியவர், அந்தவகையில்

இன்று பெரியாரிஸ்ட்கள் சொல்லி வந்த பொய்கள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் அது பின்வருமாறு –

ஈவே ராமசாமி பற்றி உண்மையை எடுத்துக் கூறினால் அவர்கள் குரலை முடக்கவும் , அதை முழுமையாகத் தடுக்கவும் இங்கே ஒரு கூட்டம் வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்யும். அந்த கூட்டம் சமீபத்தில் ஜெகநாத் ஸ்ரீனிவாசன் என்ற நண்பர் எழுப்பிய ஆதாரத்துடனான குற்றசாட்டிடை எதிர்கொள்ள முடியாமல் அவர் Facebook கணக்கை முடக்கியுள்ளார்கள் என்று செய்தி.

இதே wikipediaல் 2008 வரை ஈவேரா அவர்களுக்கு வைக்கம் வீரர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டதாக இருந்த தகவல் – 2009ல் இருந்து மாற்றி ஈவேரா அவர்களை அவருடைய ஆதரவாளர்கள் வைக்கம் வீரர் என்று அழைத்தார்கள் என்று மாற்றினார்கள். இதற்கே பலகாலம் சண்டை போட வேண்டியதாகயிருந்தது. ஒரு உண்மையை மாற்ற இவ்வளவு அக்கபோரு.

இப்போது UNESCO விருது என்ற பொய்யை உடைத்து விட்டார்கள். இதனால் சென்ற ஆண்டுவரை ஈவேரா Awards என்ற இடத்திலிருந்த UNESCO இந்த ஆண்டு முதல் தூக்கிவிட்டார்கள் wikipediaல் இருந்து.

இதையும் படிக்க:  sv சேகர் வீட்டின் மீது கல்லெறிந்த பத்திரிகையாளர்கள் ஏன் திமுகவினர் சக பத்திரிகையாளரை அடித்ததை கண்டித்து போராடவில்லை பயமா இல்லை பாசமா ?

இப்போ அப்படி ஆதாரம் இருக்கிறவர்கள் என்ன செய்ய வேண்டும்??? ஆதாரத்தைக் கொடுத்து அந்த நீக்கப்பட்டது தவறு என்று நிரூபிக்க வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டுக் கதை அளப்பதற்கு வெக்கப்பட வேண்டும் வீரமணி அவர்கள். இப்படி பச்சையாக மக்களை ஏமாற்றி பலகாலம் பிழைப்பு நடத்திய திக கூட்டம் வெக்கமே இல்லாமல் கேள்வி கேட்பவர்களை எதிர்த்துக் கொதிக்கிறது. வீரமணி அவர்களுக்கும் சுபவி அவர்களுக்கும் கொதிப்பாக இருந்தால் போய் கிணற்றில் குதிக்கவும் இல்லை ஆதாரத்தைக் கொண்டுவாருங்கள். சும்மா நீங்கள் சொல்வதை எல்லாம் நம்புவதற்கு இது ஒன்றும் 1970கள், 1980கள் அல்ல , இது 2019. ஆதராம் வேண்டும். அசைக்க முடியாத ஆதாரம்.

ஈவேராவுக்கு UNESCO விருது கொடுக்கவில்லை என்றும் கூறியது மட்டும் அல்ல இங்கே பெரும்பாலும் பெரியார் அதைச் செய்தார் இதைச் செய்தார் என்று கூறும் பலவிசயம் வடிகட்டின பொய். வைக்கம் வீரர் பெரியார் என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அடுத்தவன் போராட்டத்திற்கு லேபில் ஒட்டி அதை வைத்து ஆதாயம் தேடிய கூட்டம் தானே பின் எப்படி வெக்கம் இருக்கும். எதைச் சொன்னாலும் அதற்கு ஒரு முட்டுக்கொடுக்க இவர்களே ஒரு வரலாற்றை எழுதுவது இவர்களுக்குக் கைவந்த கலை. சுபவீ, வீரமணி போன்றவர்களுக்கு அதுதானே உழைப்பு , பிழைப்பு எல்லாமே.

இதையும் படிக்க:  களம் காண்கிறார் செளமியா அன்புமணி எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க பாமக ரெடி !

கூடிய விரைவில் ஒட்டுமொத்தமாக ஈவேரா என்ற மனிதர் எப்படி இங்கே வலுக்கட்டாயமாக்க மக்கள் மத்தியில் முக்கியமாகப் பட்டியலின மக்கள் மத்தியில் பதியவைத்து மக்களை ஏமாற்றி எப்படி ஆதாயம் தேடினார்கள் என்ற உண்மையை மீண்டும் ஒருமுறை தெளிவாக வீடியோ பதிவினை கூடிய விரைவில் வெளியிடுகிறேன். நீங்கள் ஒரு ID முடக்கலாம் ஒரு பதிவை நீக்கலாம். ஆனால் உண்மை என்றென்றும் தூங்காது, அன்று ஊர் வாயையும் மூட முடியாது.

முழுவதும் அம்மணமாக நிற்க வேண்டிய அருவருப்பான நாட்களைத் திராவிட கழகம் அதன் அரசியல் கழகமும் சந்திக்கத் தயார் ஆகுங்கள். உங்கள் இருவரையும் தமிழகத்தை விட்டு விரட்டி அடிக்கும் நாள் நெருங்குகிறது.

ஈவேரா விட்டுச் சென்று 10000கோடி சொத்துக்கு சில நக்கி பிழைக்கும் கூட்டம் வேண்டும் என்றால் அவருக்கு முட்டுக் கொடுக்கட்டும் – அவர்களுக்குப் பசிக்கும் அல்லவா. அதனால் பாவம் அவர்களை அந்த கூட்டத்தை விட்டுவிடலாம். ஆனால் உண்மை மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய காலம் இது. திராவிட அரசியல் செய்த சித்து விளையாட்டுக்களை உடைத்துக் காட்டிட வேண்டிய நேரம் இது. எனவே எல்லோரும் பேசுங்கள்.

இதையும் படிக்க:  ராகுல் தாத்தா நேருவின் ஆட்சியில் நடந்த LIC ஊழல் அப்பவே கிங் தெரியுமா?

வைக்கம் வீரர் பெரியார் என்று பாடப்புகத்தில் எழுதிப் படிக்க வைத்து அதை முக்கிய கேள்வியாகத் தேர்வுகளில் ஒவ்வொருமுறையும் கேட்டு அதை மாணவர்களை வலுகடடாயமாக படிக்க வைத்து – ஒரு மாநில மக்களையே இரண்டு தலைமுறையாக முழுவதும் முட்டாள் ஆக்கி இருக்கிறார்கள் இந்த திமுக திக இரு கூட்டுக் களவாணிகளும்.

சும்மா விடக் கூடாது இவர்களை… கூடிய விரைவில் உங்களுக்கு ஒரு special வீடியோ வெளியிடப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி -திரு மாரிதாஸ்

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...