பேருந்தில் மே-17 இயக்கத்தினரை விரட்டி அடித்த பொதுமக்கள் வைரலாக பரவும் காணொளி இதுதான் தமிழக மக்களின் மனநிலையா?

பேருந்தில் மே-17 இயக்கத்தை சேர்ந்தவரை விரட்டி அடித்த பொதுமக்கள் வைரலாக பரவும் காணொளி இதுதான் தமிழக மக்களின் மனநிலையா?

சென்னை.,

சென்னை பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அரசு பேருந்தில் அனுமதியின்றி ஏறிய அடையாளம் தெரியாத ஒரு இளைஞர் மற்றும் இளம் பெண் ஆகிய இருவர், மத்திய, மாநில அரசுகளை கண்டித்ததுடன் தூத்துக்குடி படுகொலையில் ஈடுபட்டவர்கள் குறித்தும் தங்களது இயக்கத்தை நடத்த பண உதவி வேண்டி பொது மக்கள் இடையே நிதி திரட்டினர்.

அனுமதியின்றி அரசு பேருந்தில் பிரச்சாரம் செய்வது குற்றம் அப்படி இருக்கையில் நாட்டிற்கு எதிராக இளைஞர் பேசியதாக கூறப்படுகிறது, அதனை தொடர்ந்து பேருந்தில் இருந்த நபர் ஒருவர் யாரிடம் அனுமதி வாங்கி நீங்கள் இங்கு பிரச்சாரம் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்டதுடன் அவரை பேருந்தில் இருந்து இறங்க சொல்கிறார்.

இதையும் படிக்க:  மல்லையாவுக்கு சொந்தமான தனி விமானத்தில் ராஜஸ்தான் பறந்த ஸ்டாலின் வாடகை எவ்வளவு தெரியுமா?

இளைஞர் மறுக்கவே நடத்துனர் மற்றும் பேருந்தில் இருந்த சில பொதுமக்கள் திரண்டு அந்த இளைஞரை விரட்டி இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் எங்கும் தலை காட்ட முடியாத நிலையில் சில பிரிவினைவாத அமைப்புகள் உள்ளன என பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில். இது போன்ற நிகழ்வுகள் மூலம், மக்கள் மே 17 போன்ற இயக்கத்தை முழுவதும் புறம்தள்ளிவிட்டனரோ என்றே என்ன தோன்றுகிறது.

நன்றி -நம் இந்து

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...